பண்ணில் மயங்கி வாழ்பவனே
கனலான கருப்பொருளே
கங்கையின் பிறப்பிடமே
ஐந்தெழுத்து மந்திரமே
அனைத்திற்கும் காரணமே
திருப்புகழின் பெருமிதமே
தேவார அருமருந்தே
தென்னாட்டு திரவியமே
எந்நாட்டுக்கும் இறையமுதே
ஆயக்கலைகளின் அடிசுவடே
அகில உயிரின் சுழிமுனையே
அன்ன ஆதாரத்தில் நிலைத்தவனே
எண்ணும் எழுத்தையும் தந்தவனே
பண்ணில் மயங்கி வாழ்பவனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நின்றவனே
நாட்டியத்திற்கு இலக்கணம் கொடுத்தவனே
நான்மறைக்கும் ஆதியாய் உள்ளவனே
உடலில் பிணியை அகற்றிவிடு
உள்ளத்தில் மகிழ்ச்சியை தொடரவிடு
ஒவ்வொரு நாளிற்கும் உழைப்பைக் கொடு
உத்தமமான செல்வத்தை சேர்க்க வழியை வகு.
--- நன்னாடன்.