திகைக்க வைக்கும் சூழல் எதிரே

வாழ்க்கை என்னும் ஓட்டப் பந்தயத்தில்
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு போட்டி
காலை வேளையை கடக்கனும் என்றால்
கடுமையான பயிற்சியை கையாள தெரியனும்

சுணக்கமாய் எழுந்து சோம்பி இருந்தால்
இணக்கமான கழல் நம்மை அண்டாது
நுணுக்கமாய் காலத்தை கணக்காய் பகுத்தால்
வனப்பமான வாழ்க்கை நம்மை வந்தடையும்

திணையளவு வாய்ப்பு திடுமென கிடைத்தால்
திடமாய் அதைப் பற்றி ஜெயிக்க முயலனும்
திகைக்க வைக்கும் சூழல் எதிரே வரினும்
திறமையாய் அதனை கைத்திறன் கொள்ளனும்

தேவைக்கு மேலே எது நம்மை நாடினும்
தேவையில்லாத் தொல்லை அதனால் சேரும்
குருதியும் கொழுப்பும் குலைப் பட்டிணியும்
காமம் கோபம் ரோகம் குரோதம் இதனுள் அடக்கம்.
---- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (26-Apr-19, 10:30 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 105

மேலே