முயன்றால் ஜெயிக்கலாம்

முயன்றால் ஜெயிக்கலாம்
துணிவுக் கூட வேண்டாம்
தொடர்ந்து தோல்வி வந்தாலும்
துவளாது மனங்கொண்டு
தோல்விக் குறித்து ஆய்ந்து
தொடரும் தவறைக் கலைந்தால்
தோற்றிடும் நம்மிடம் தோல்வி
பதற்றமின்றி பயணித்து
கூச்சமின்றி கேட்டு தெளிந்து
பாதையதில் சரியாய் பயணித்தால்
முடிவு அது முழுதாய் நம்மை
ஆட்கொள்ளும் ஜெயமாய்.
---- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (26-Apr-19, 9:33 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 2519

மேலே