வாலிபக் கூட்ட வளமான நெஞ்சில்
மடைத் திறந்த வெள்ளம் போலே
தெளிவால் மக்கள் மனம் மாறாதோ
மண்ணை ஆளும் மந்திரி யாவரும்
மக்கள் நலம் பேணுவாறோ
சுற்றில் உள்ள மேல் நாட்டைப் போலே
நற்சூழல் இங்கு நிலவாதோ
வீட்டைக் காக்கும் தலைவன் போன்றே
நாட்டைக் காக்கும் நல் தலைவன் வருவானோ
காசைச் சேர்க்கும் வியாபாரக் கும்பல்
தூசாய் சிதறி ஓடாதோ
தேவையைச் செய்ய தண்டம் கேட்டல்
தேய்ந்து சிதைந்து அழியாதோ
வாலிபக் கூட்ட வளமான நெஞ்சில்
நாட்டை வளமாக்கும் எண்ணம் தோன்றாதோ
வருங்கால சந்ததி வளமாக வளர - அவருள்
வாள் போன்ற அறிவை வளர்த்திடுவோம்.
---- நன்னாடன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
