மனநிலையில் எழும் அதிர்வலையால்

சாபம் உண்மையா? சதுர் வேதம் உண்மையா?
சபித்தல் பலிக்குமா? சடங்குகள் தேவையா?
இம்மை மறுமை உண்டா? பாவ புண்ணியம் சரியா ?
தழைத்தோங்கும் உலகில் சரமான கேள்விகள் இவை.

உன்னில் தவறென்று ஒத்துச் செய்யும் நிகழ்வால்
உடனடி தண்டனை நீ பெற்றால் அது சாபம்
உன்னை உனக்கு உணர்த்தும் அறிவுரை கூறி
உள் மனதினை தூய்மைப்படுத்தும் நூலே வேதம்

எவ்வுயிரையும் சமமாய் பாவிக்கும் உயிரினம்
தான் துன்பம் கண்டு துடிக்கும் நிலையில்
மனநிலையில் எழும் அதிர்வலையால் எதிரியின்
வலிமை குறைந்து துன்பம் நீங்கலே சபித்தலாம்.

ஆறறிவினத்தின் மன வெளிப்பாட்டின் செறிவு சடங்கு
பொய் களவு கொலை கோபம் அறிதல் மறுமை நிலை
நாயாய் பிறந்து செழிப்பாய் வாழ்தல் புண்ணிய நிலை
கொண்டதைக் கொண்டு சீருடன் வாழ்வோம்.
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (25-Apr-19, 5:39 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 273

மேலே