காதல் ஓளி வீசிவிடும்

புறத்தில் விடியல் இல்லை
புது வானம் பிறக்கவில்லை
அகத்தில் மட்டும் ஆயிரம் விடியல்
அத்தனையும் உன் பூமுகம்தான்

மனஇருள் சூழ இங்கு
கிரகணமே வந்தாலும்
நிமிடங்கள் கரைவதற்குள்
நின் நேசம் வந்துவிடும்

உந்தன் காதல் மறைப்பதுவும்
மேகம் நிலவை சூழ்வதுபோல்
அன்பு காற்றில் மாறிவிடும்
காதல் ஓளி வீசிவிடும்

எழுதியவர் : வெங்கடேசன் (28-Mar-22, 5:40 am)
சேர்த்தது : வெங்கடேசன்
பார்வை : 90

மேலே