நானும் இங்கு தாயுமானேன்

என் உணர்வுகளின் இலக்கியமே.....
என்னில் பூத்த காதல் கவிஅமுதே.....

மாதம் பத்து சுமந்தாலே தாய்மை எனும் உலகம்
நானோ இங்கு உன் நினைவுகளை சுமக்கும் தாயும் ஆனேன்......

என் உணர்வுகள் அனைத்திற்கும் நீயே கருவாக......
நானும் இங்கு தாயுமானேன்........

கார்மேகக் கண்ணன் களிப்பெடுக்க...
வானமகள் வண்ணக்கோலமிட்டு
காவிரியும் இங்கு காதல் கொண்டால்
மண்ணின் மனம் கொண்டு முத்துகுளிக்க.......

அதுபோலத்தான் எந்தன் காதலும்
உந்தன் நினைவுகள் என்னில் முத்துக்குளித்திடவே....
எந்தன் உணர்வுகள் உன்னை கருவாக என்நெஞ்சில் சுமக்கிறது.......

விந்தும் இல்லா விந்தையாக...
என்னில் உதித்த காதல் கருவே......
எந்தன் இதயமும் இங்கு கருவறையாக
நானும் இங்கு தாயுமானேன்..........

எழுதியவர் : YUVATHA (22-May-19, 11:49 am)
பார்வை : 136

மேலே