செம்மொழி - தமிழ்
செம்மொழி - தமிழ்
உலக தாய்மொழிகளுள் தமிழ்மொழி
செம்மொழியாக திகழ்கின்றது
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய
மூத்தக்குடி என்பதற்கேற்ப தொன்மையானதாகும்
தமிழ் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என
தனித்தன்மையுடன் வளர்ந்து வந்துள்ளது
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலும், திருக்குறளும்
பொதுமைப் பண்புகள் கொண்டு விளங்குகின்றன
தமிழ் மொழியில் சங்கத் தொகுப்புப் பாடல்கள் நீதி நூல்கள்
நடுவு நிலைமையோடு படைக்கப் பட்ட இலக்கியங்கள் ஆகும்
தமிழ் மொழி தாய்மைதன்மையுடன், பல மொழிகளுக்கு தாய் மொழியாகவும், பழமையான கிரேக்க மொழியிலும் பல தமிழ் சொற்கள் இடம் பெற்றுள்ளன
தமிழரின் பண்பாடு. கலை, பட்டறிவு பட்டினப்பாலை, சிலப்பதிகாரம்,என பற்பல இலக்கியங்கள் வெளிக் கொணர்கின்றன
தமிழ் மொழி பிறமொழித் தாக்கமில்லாத மொழியாக
தொல்காப்பியர் காலத்தில் இருந்து வந்துள்ளது
தமிழ்மொழி (புறநானாறு சிலப்பதிகாரம்) இந்திய மண்ணிற்கு மட்டுமே தனிச்சிறப்பான இலக்கிய வளம் கொண்டது.
யாதும் ஊரே யாவரும் கேளிர், ஒன்றே குலம் ஒருவனே தேவன், என்ற வாழ்வியல் நெறியும்,கோட்பாடுகளும், கொண்ட உயர்சிந்தனை மொழியாகும்
மூன்று தமிழும் ஒருங்கே கொண்ட சிலப்பதிகாரம் கலை இலக்கியத் தனித்தன்மையின் வெளிப்பாடு ஆகும்
தற்போது வகுக்கப்பட்டுள்ள மொழிக் கோட்பாடுகள் விதிகள் அன்றே தொல்காப்பியத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுள்ளன
அனைத்து செம்மொழி தகுதிப்பாடுகளை உள்ளடக்கிய நம் தமிழ்மொழியை தலைசிறந்த மொழியாக கொண்டாடுவது முறையே!!
ராரே