நிதர்சனங்கள்

வாசு, " கோமதி ... நீ பண்றது உனக்கே நல்லா இருக்கா? கொஞ்சமாவது யோசியேன்; சுகந்தி யாரு ? என் அக்கா மகள் தானே; அதுவும் குழந்தை தானே;
கோமதி, "வாசு , நீங்க என்னை அப்படி பார்க்காதீங்க ; நீங்க யோசித்து பாருங்க ; நான் யாருக்காக இப்படி பேசுறேன்; நமக்காக தானே ; நமக்கும் ஒரு குழந்தை வேணும் தானே;
வாசு, "அதுக்காக என் அக்காவுக்கு நான் உதவி செய்வதை தடுக்கும் உரிமை உனக்கு கிடையாது" ;
கோமதி" இத்தனை நாள் நீங்க செய்றதை வேடிக்கை தானே பார்த்தேன்; ஏதாவது சொன்னேனா ";
இப்படியே மறுபடியும், மறுபடியும் , இருக்கறத எல்லாம் கொட்டி தீர்த்துட்டால் நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன்"; கத்தும் அவளை என்ன செய்வது என்று தெரியாமல், மௌனமாக வெளியில் சென்றான் வாசு;
வாசு, சோகமாக பார்க்கில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருப்பதை பார்த்து அசோக் அவன் அருகில் வந்தான்;
அசோக், "என்னடா, வாசு, அதிசயமா பார்க் வந்திருக்க; இப்படி சோகமா வேற உட் கார்ந்திருக்க?'
வாசு, " நீயும் தான்; கோயில் இன்னைக்கு லீவா? பார்க் பக்கம் வந்திருக்க”;
அசோக், " கிண்டல் பண்ற பார்த்தியா? எப்பப்போ எது தேவையோ அப்பப்போ அதை அதை செய்யணும்டா; சரி சொல்லு; எங்க இந்த பக்கம்?"
வாசு" என்னத்த சொல்ல? இந்த உலகம் நம்மை ரொம்ப படுத்துதுடா " ஓட ஓட விரட்டுது;
ஓடி ஓடி நான் ரொம்ப டயர்ட் ஆகிட்டேன்; என்னால முடியல";
அசோக் ," என்னடா சொல்லற; நீ எப்போவும் எதற்கும் சோர்ந்து போக மாட்டியே ?" ஏன் என்ன ஆச்சு" ;
வாசு, "என்னத்தடா சொல்றது ," வாழ்க்கையோட போராடறது கூட என்னால முடியும் ; ஆனால் ?
நம்ம உறவுகளோடு போராட தான் என்னால முடியல";
அசோக்," என்னடா ஆச்சு ? ; உன் மனைவியோட சண்டையா ?".
வாசு, "அது எப்போதும் எங்களுக்குள்ள வந்ததில்லை; இப்போ கொஞ்ச காலமா வாக்கு வாதம் நிறைய பண்றா ";
அசோக், " உன் மனைவி கற்பகம் ரொம்ப நல்ல பொண்ணுதானேடா ; உங்களுக்குள்ள என்ன பிரச்னை ?" ; குழந்தை இல்லாததா? அது குறித்து தான் சண்டையா "?
வாசு ," அது இல்லடா ; உனக்கே தெரியும் ; எங்க அக்காவும், எங்க மாமாவும் எத்தனை அன்பாக இருப்பாங்க; அவங்க ஒரே பொண்ணு சுகந்தி;
அசோக் , " ஆமாம்டா; எல்லோருக்கும் தெரியுமே ; நல்லபடி நடந்துப்பாங்க; அவங்களுக்கு என்ன ?";
வாசு, " அவங்க பொண்ணு சுகந்தி க்கு, ஹீமோபிளா டிஸ் ஆர்டர் ; புரியும்படி சொல்லனும்னா வைட்டமின் k டெபி சியன்சி ன்னு சொல்லலாம்; ";
அசோக் ," நான் கூட கேள்விப்பட்டிருக்கேன்; பிளட் சீக்கிரம் கிளாட் ஆகாது ; அதானே;".
ஆமாம் ; அதேதான்; -வாசு ;
அசோக் ," ரத்தம் வராத வாறு அடி படாமல் பார்த்துக்கலாம்; அதுல என்ன பிரச்சனை இப்போ "?
வாசு, " போன வருஷம் வரைக்கும் அவளை நல்லபடி பார்த்துக்கிட்டோம்; பொம்பள பிள்ளை இல்லையா ?" ; ஏஜ் அட்டென்ட் பண்ணதில் இருந்து அவளுக்கு ஒவ்வொரு மாதமும் பிளட் ஏத்த வேண்டி இருக்கு; அதுக்கு நிறைய செலவாகுது. என்ன செய்றதுன்னு தெரியல ;".
அசோக் , " சரிடா, பார்த்து செய்வோம் ; இப்போ உனக்கு என்ன பிரச்னை ?"
வாசு, " அந்த குழந்தையை காப்பாற்ற எங்க அக்காவும், மாமாவும் போராடிட்டு இருக்காங்க; நானும் என்னால முடிந்த பண உதவியை செய்கிறேன் ; அதுக்கு தான் என் மனைவி சண்டை போடுறா".
அசோக், " அதுல அவங்களுக்கு என்ன பிரச்னை ";
வாசு, " பிரச்சினையே பணம் தானடா";
கடவுள் , சில வியாதிகளை ஏழைகளுக்கு கொடுக்க கூடாது; பணம் கொடுக்கலையா அதேபோல நேர்மையாக வியாதியையும் கொடுக்காமல் இருக்கணும்; ஏன் , பணம் கொடுக்கலைன்னு எந்த ஏழையாவது கடவுள் கிட்ட சண்டை போடுறோமா? இல்லையே; அந்த நேர்மையும், இரக்கமும் கடவுளிடம் இல்லயே ஏன் ? ;”
அசோக், " உன் மனைவி என்னடா சொல்றாங்க? ;
வாசு, " அவளுக்கு குழந்தை இல்லை ; அதுக்கு ஒரு டிரீட்மென்ட் எடுத்திட்டு இருக்காங்க; அதுக்கு செலவு நிறைய ஆகுது; அதனால நான் எங்க அக்காவுக்கு செய்யற உதவியை நிறுத்த சொல்லறாங்க ; அது தான் பிரச்னை; "
" ஒரு பக்கம் பிறந்த பிள்ளையை இழந்துட கூடாதுன்னு தவிப்பு;
இன்னொரு பக்கம் பிறக்கப்போகும் பிள்ளைக்கான செலவு " ;
அசோக், " உன் மனசு புரியுது -இல்லாத உயிருக்கு செலவு செய்றதை விட இருக்குற உயிருக்கு செலவு செய்யணும்னு நீ நினைக்கிற ;
வாசு, "புரிந்து கொண்டால் நல்லது"; அவளுக்கு இது புரிய மாட்டேங்குதே ;
அசோக், "நீயும் சில விஷயங்களை புரிந்துகொள்ளணும்; வாழ்வியல் நிதர்சனங்களை நாம் எல்லோரும் புரிந்து கொள்ள முயலனும்";
சில நிதர்சனங்கள் எத்தனை நிஜமாக இருந்தாலும் அதை நாம் தூர இருந்து பார்க்க முடியுமே ஒழிய, நாம் அதனுடன் மட்டுமே பயணிக்க இயலாது; இதுக்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு, " பசி என்பது அவ்வப்போது ஏற்படும் ஒரு உணர்வு; அதுக்காக ஒரே நேரத்தில் சாப்பிட்டு அதை முடிக்கவும் முடியாது; சாப்பிடாமல் இருந்து அதை தவிர்க்கவும் இயலாது; அது போல தான் நம் குடும்ப உறவுகளும் அதன் சிக்கல்களும்; நாம் யாரையும் மாற்றவும் முடியாது; பிறருக்காக நம் அன்பை மாற்றிக்கவும் இயலாது; " ;
வாசு, " அப்புறம், என்ன தான் தீர்வு ? இதுக்கு;
"இந்த உலகத்தில் துன்பமே வராதுன்னு நம்ம பெரியவங்க என்னைக்கும் சொன்னதில்லை; எத்தகைய துன்பமாக இருந்தாலும் அதனை எப்படி கடந்து வரலாம்னு சொல்லிருக்காங்க;
நம்ம இதிகாசங்கள் சொல்றது எல்லாம் ஒண்ணு தான்; எத்தனை பெரிய ராஜா வாக இருந்தாலும் அவனும் கஷ்டங்களை கடந்து தான் வரணும்; தான் கற்ற வித்தைகளை பயன்படுத்தி இறைவனின் துணையுடன் எப்படி ஜெய்கிறான் என்பது தான் முக்கியம்; " - அசோக்;
"என்னடா, ரொம்ப பெரிய அறிஞன் மாதிரி பேசற; - வாசு;
அசோக், " டேய், என்னை புகழறயா? வாரறயா ?; ரொம்ப சிம்பிள் டெக்னீக்; ".
எப்போதும் பிரச்சனைக்குள்ள இருந்து யோசிக்கிறவங்க சரியான கோணத்துல யோசிக்கமுடியாது; மூன்றாவது ஆள் பிரச்சனைக்கு வெளியில் இருந்து யோசிக்கணும்; “
" சரி, புரியறமாதிரியாவது சொல்லித்தொலை"; - வாசு.
" பொறுமை புருஷ லட்சணம் மச்சி; பொறாமை இன்மை பெண் லட்சணம்; முறைக்காதே சொல்றேன்;
"மகாபாரதம் கதை தெரியுமா ? - அசோக்;
" கொஞ்சம் கொஞ்சம் தெரியும்; அதுக்கும், இதுக்கும் என்னடா சம்மந்தம் ?- வாசு;
அசோக், “நம்ம இதிகாசங்களோட வலிமையே வாழ்வில் எந்த பிரச்சனை எந்த காலத்தில் வந்தாலும் அதற்கான தீர்வு அதில் இருக்கும்;
ஒரு சின்ன சீன் சொல்லவா ?மகாபாரத்துல போருக்கு மூல காரணம்னு நாம யாரையும் சொல்ல முடியாது; எல்லோருமே போரை சிறப்பா தூண்டி விட்ருப்பாங்க " , இல்லையா? ;
தருமரை தான் நாம திட்டுவோம்; ஒரு பெரிய சிந்தனை உள்ள மனிதர் இப்படி பொண்டாட்டியை வைத்து சூது ஆடலாமா? " ன்னு;
ஆனால், அந்த கட்டத்தில்
எப்படி துரியோதனன் சகுனி மாமாவை தாயம் உருட்ட சொன்னானோ , அப்பவே தருமர் கிருஷ்ணனை விட்டு தாயம் உருட்டியிருந்தால் நிச்சயம் பாண்டவர்கள் தோற்றிருக்க மாட்டார்கள்; யுத்தமும் இருந்திருக்காது ; இதில் நமக்கு புரிய வேண்டியது கடவுள் துணை இருந்தால் எத்தனை சிக்கலையும் ஜெயிக்கமுடியும்"- அசோக்;
"சரி, நீ சொல்ல வந்ததை சொல்லு ; ப்ளீஸ் "- குழப்பாதே என்னை; - வாசு;
" ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒரு குருசேத்திரம் தான்; எப்படி பகவான் கிருஷ்ணன் தனது ஐந்து குதிரைகளை தேரில் கட்டி போர்க்களத்தில் வெற்றிக்காக போராடுகிறாரோ அது போல இறைவனே துணை நின்றாலும் தருமம் தெரிந்த தருமராக, வில்வித்தை தெரிந்த அர்ஜுனனாக , உடல் மற்றும் மனோ பலம் கொண்ட பீமனாக , நோய்களை வென்றிட தெரிந்த நகுலனாக , மற்றும் வான சாஸ்திரமும், காலகணக்குகளும் தெரிந்த சகதேவனாக என்ற இத்தனை அறிவுத்திறமும் கொண்ட ஒருவனாக இருந்தால் தான் குருச்சேத்திரம் போன்ற நம் வாழ்க்கை யுத்தத்தில் நாம் வெற்றி கொள்ள முடியும்;
இதில் ஒன்று இல்லாவிடிலும் நாம் வாழும்போது தோற்போம்; இவைகள் எல்லாமே இருந்தால் கர்ணன் போன்ற வீரனை, பீஷ்மர் போன்ற பிதாமகனை, சகுனி போன்ற தீயவனை, துரியோதனன் போன்ற எதிரிகளை எளிதில் வென்றிட முடியும் என்று சொல்கிறது இந்த வாழ்வியல் தந்திரம்; வெறும் கதையல்ல இது நாம் படித்து பின் பற்ற வேண்டிய காவியம்;
"சும்மா, பிரச்னை இருக்கு; சத்தம் மட்டும் போட்டு சண்டை பண்ணால் தீருமா ன்னா நிச்சயம் தீராது; - அசோக்;
வாசு, " நிச்சயமா நம் பெரியோர்கள் மகாபாரதத்தை கதைக்காக மட்டும் சொல்லலை; அதில் உள்ள விஷயங்களை நாம் நன்கு புரிந்து கொண்டால் நமது வாழ்க்கைக்கும் வழி கிடைக்கும்".
அசோக், "சரி நீ என்ன புரிஞ்சுண்ட? என்ன பண்ணப்போற ";
வாசு," அதாவது, சுருக்கமாக சொன்னால் தருமம், வித்தை, மனபலம், நோயற்ற வாழ்வு, காலக்கணிப்பு ஐந்தும் வெற்றிக்கு வழி;( வாசு தொடர்ந்து பேசினான்)
முதல்ல என் மனைவிக்கு சாரி சொல்ல போறேன்; நமது உறவுகள் தான் நமக்கான மூலதனம் என்று புரிய வைக்கிறேன்; அதுக்கு முதல்ல
அவளும் சுகந்தியும் நெருங்கி பழகும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தறேன்; அப்போ தான் அந்த குழந்தையும் நாம காப்பாத்தணும்னு அவளுக்கும் தோணும்;"
அசோக் " அது மட்டுமில்லை; உன் மனைவிக்கும் அவங்களுக்கான ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள நிச்சயம் ஒரு வாய்ப்பு - கொடுக்கணும்;
" நம்ம சுய லாபத்துக்காக மற்றவர்களின் ஆசைகளை தப்புன்னு சொல்றதும், பிறரின் வாய்ப்புகளை தட்டி பறிக்கிறதும் மிகப் பெரிய பாவமும் கூட;
இந்த உலக வாழ்க்கையில் எல்லோரும் ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் வாழ்கை நடத்துகிறோம். காலை எழுவோம் என்ற நம்பிக்கை இல்லையென்றால் இந்த உலகில் எந்த ஒரு மனிதனும் உறங்கவே மாட்டான்;
உன் மனைவிக்கு தனக்கும் ஒரு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையை குறைக்காதே;
அதே சமயம்,
நம் நாட்டில் ஒரு பக்கம் நிறைய வெள்ளம், புயல் ; இன்னொரு பக்கம் வறட்சி, பட்டினி என்ற வாழ்வியல் நிதர்சனங்களை புரியவை;
அனைத்து நதிகளையும் இணைக்கும் நிலை வந்தால் நம் நாட்டின் நிலை மாறுவது போல, பிள்ளை இல்லா பெற்றோர்கள் ஒவ்வொருவரும் ஒரு குழந்தையை தத்தெடுத்தால் உலகில் அனாதைகளும், ஆதரவற்றவர்களும் இருக்க மாட்டார்கள் என்பதை அவர்களுக்கு புரிய வை;”
வாசு, "அசோக், எனக்கு ஒரு சந்தேகம், அப்போ குருச்சேத்திர போரை தவிர்க்கவே இயலாதுன்னு தானே அர்த்தம்; நாமும் நம் உறவுகளை எதிர்த்து தான் ஆகணும் ? அப்படி தானே? ";
அசோக், " சரியாப்போச்சு போ; இப்படி தான் நிறைய பேர் நினைக்கிறாங்க; அது தான் இல்லை;
மகாபாரதம் அர்ஜுனனுக்கு மட்டும் இல்லை; எல்லோருக்கும்;
பீஷ்மர், துரோணர், துரியோதனன் மற்றும் அதன் அத்தனை பாத்திரங்களையும் நாம் மனிதர்களில் காண முடியும். இது எல்லோருக்குமான வாழ்வியல் முறை; எதையெல்லாம் செய்திடாது இருந்தால் குருச்சேத்திரம் நம் வீட்டுக்குள் நடக்காமல் தவிர்க்கலாம் என்பதையும் தெளிவாக படிக்கலாம்;
இப்போ, உனக்கு தெளிவு பிறந்ததா"; - அசோக்.
வாசு, "இல்லடா , இன்னும் ஒரே ஒரு கேள்வி, இத்தனை திறமைகளும் இல்லாதவர்கள் வாழ்வில் தோற்று தான் போகனமுமா?";
அசோக், " சரியாதான் கேட்கற; அதுக்கும் வழி இருக்கு ; அது தான் திரௌபதி கையாண்ட வழி ;அவளை போல இறைவனை மட்டும் நினை; இந்த ஐந்து திறமைகளும் பயன்படாத போது தன் பலத்தால் தன்னை அவமானத்தில் இருந்து காத்துக்கொள்ள போராடினாள்; எதுவும் பயனளிக்காத போது கிருஷ்ணா நீ மட்டுமே என்னை காப்பாற்ற முடியும் , கண்ணா வா, என்னை காப்பற்று …
நீயே கதி;
நீ இல்லயேல் நான் நிர்கதி ; உன்னை பற்றினால் நற்கதி;
என்று தன் கைகளை தலைக்கு மேல் வைத்து இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தாள்; தன்னிடம் முழுமையாக சரணடைந்த பக்தயை தயையுடன் கண்ணன் காத்தருளினார்;
அவளை போல பிரார்த்தனை என்பதே முழுமையான சரணடைதல் என்பதை உணர்ந்தாலே போதும்; வாழ்க்கையில் மட்டுமல்ல வாழ்வயே வெற்றி கொள்ளலாம் ;
வாசு , " சரி சரி , நடமாடும் கிருஷ்ணா, நான் தெளிவாயிட்டேன்; உனக்கு எப்படி இத்தனை தெளிவு?";
அசோக், " கோயிலுக்கு வா; கதாகாலட்சேபம் கேட்கலாம் ன்னா வர்றீங்களா "; நீங்க படித்த அறிவியல் பாடங்கள் மற்றும் செயல்களை மட்டுமே சொல்லும்; நம் நாட்டின் அறவியலோ செயல்களை மட்டுமல்ல செய்விக்கும் ஆற்றலையும், செய்யப்படுவதன் காரணத்தையும், வாழ்க்கை பாடமாக, ஏன் பல நேரத்தில் வாழ்க்கையையே பாடமாக சொல்லிக்கொடுக்கும்;
வாசு, " சரி டா, இனி நல்ல விஷயங்களை கற்க முதலில் நானும் வரேன்;"
தேங்க்ஸ் டா , இப்பவே வீட்டுக்கு போயி வெற்றி வாழ்க்கைக்கு முதல் முயற்சியை இன்றே செய்கிறேன்;
இந்த உலகை நம்மால் திருத்த முடியாது; ஆனால் நிச்சயம் நம் உலகமான நம் குடும்ப உறவினர்களை திருத்த முடியும் ;
குறை இல்லா மனிதர்களில்லை;
நிறைவே செய்ய முடியா மனங்களில்லை;
குறை யை கண்டறிந்தால் நிச்சயம் எல்லோரையும் சந்தோசப் படுத்தலாம்;
என்ற மன நிறைவுடன் வாசு வீட்டிற்கு சென்றான்;

எழுதியவர் : சம்யுக்தா ( நரேனி தாசன் ) (16-Jul-20, 10:02 pm)
Tanglish : nitharsanangal
பார்வை : 165

மேலே