மனபோராட்டம்
மூளை நினைத்ததை கூற தவிக்கின்றேன் ...
ஏனோ கூற வாய் மறுக்கின்றது....
என்னவாக இருக்கும் என்று மனம் தேடுகிறது ...
மூளைக்கும் மனதிற்கும் என்னஒரு மௌன போராட்டம் ...
என்னசொல்வது மனமே மௌனமே மூளையே முன்னின்று கூறுவாயோ...
காரணம் அறியாஎன் கண்ணீருக்கு பதிலும் அறியா என் கேள்விக்கு ...
வருத்தம் மட்டும் விழிகளில் காட்டாற்று வெள்ளம் போல் வழிந்தோடுகிறது ..
ஏன் வருத்தம் எதற்கு வருத்தம் என்ற காரணம் நான் அறியா ...
மனமே வேறு என்ன தான் அறிவாயோ ....