முடிந்துவிடும்
எங்கு இருந்தாலும்
எப்போதும் நான்
இளமையில் இறைவனை
நினைக்காமல் இருந்ததில்லை,
முதுமையிலும் உன்னை
மறந்ததில்லை நான்
உன்னோட துணையோடு
ஊரெல்லாம் சுற்றினேன்
காடு, மலைகள் கண்டேன்
கங்கையிலே குளித்தேன்
கயிலாயம் சென்று
கடவுளை தரிசித்தேன்
அய்யா முதியவரே
வயதான முதுமையும்
வாழத்துடிக்கும் இளமையும்
ஒன்றாய் வாழ விரும்பாது என்பது
உண்மைதான்
நானும் வயாதானவன் தான்
மறையோனே !
மக்களைக் காப்பது உனது
முக்கிய பணி என்றாலும்
முதியவர்களுக்கு உடல், உபாதை
இன்றி நலமோடு வாழ உதவுங்கள்
முதுமை தவறி கீழே விழுந்தால்
முடிந்து விடும்.