சிதம்பரம் எனும் பேருக்குப் பெருமை

சிதம்பரம் எனும் ஊருக்கு பெருமை
அங்கு ஆடும் ஆடல் அரசனால்
வேய்ந்த ஒளிரும் பொற்கூரையால்
அதில் பொதிந்த தத்துவ அர்த்தங்களால்
தொங்கும் வில்வ மாலை ரகசியத்தால் !

சிதம்பரம் எனும் பேருக்குப் பெருமை
அவர் ஊருக்கு பாரத நாட்டிற்குப் பெருமை
சிறையில் செக்கிழுத்த செம்மலால்
கடலில் ஆங்கிலேயனுக்கு எதிராகக்
கப்பலோட்டிய தமிழனால் !

இன்று வ உ சிதம்பரனார் பிறந்த நாள்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Sep-19, 9:36 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 117

மேலே