செல்லப்பன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : செல்லப்பன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 18-Oct-1963 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 138 |
புள்ளி | : 3 |
நட்பை நட்பாக நட்புக்காக நட்பாய் இருப்பவர்களை தேடிகொண்டிருக்கிறேன். ஆனால் எம்மிடம் இல்லாததை, எம்மால் இயலாததை, எம்மிடம் எதிர்பார்ககாத நட்பினை தேடுகிறேன். இயன்றதை செய்ய, உள்ளதை கொடுக்க, முடிந்ததை செய்யத்தானே நட்பு
செங்கற்களை
ஒருவர் போட ஒருவர் பிடிக்கும் உடலசைவு..
பேருந்தில்
கடைசிக் கால்தடத்துக்கும்
நடத்துநரின் விசிலுக்குமுள்ள ஒத்திசைவு....
மனைவி
பார்க்கும் திசையில் நடக்கும் கணவரின்
புரிந்துணர்வு..
நாய்க்குட்டியின்
வீசும் இரைக்கும் கவ்வும் வாய்க்குமான
சுறுசுறுப்பு…
காணும் போதெல்லாம் கருத்தில் தோன்றும்
எதுகை மோனை எனும் சிறப்பு..
ஓம்பும் உயர்ந்தோர் உரைத்திடும் நல்மொழி ஊக்கந்தரும்
தேம்பல் விடுத்துநீ தேறிட தைரியம் சேர்ந்துவரும்
சூம்பிக் குமைவதில் சோர்வு மிகுந்திடும் சுந்தரனே
சோம்பிக் கிடந்திடில் வெற்றி கிடக்கும் தொலைவினிலே !
( இலந்தையார் தந்த ஈற்றடிக்கு எழுதிய கட்டளைக் கலித்துறை )-
விடியலைப் போற்றி பொழிப்பெதுகை அமைந்த நிலைமண்டில ஆசிரியப்பா !!
****************************************************************
இரவில் சூழ்ந்த இருளை விரட்டக்
கருணை யுடனே கரங்கள் நீட்டி
ஒளியால் மெழுகி உளமது வியக்கக்
களையாய்க் கிழக்கில் களிப்புட னெழுந்தாய் !
உயிர்கள் வாழ்வில் உயர்வை யெட்டத்
தயக்க மின்றி தயைநீ புரிந்தாய் !
ஓயுமோ நின்பணி? ஓயா துழைக்கும்
நாயக! வானொளிர் ஞாயிறே வாழியே!!
சியாமளா ராஜசேகர்
சிறப்பு!
பெண் அடிமை தப்பு,
ஆண் அடிமை தப்பு,
அடக்கி வாழ்வது தப்பு,
அடங்கி வாழ்வதும் தப்பு,
அணைத்து வாழ்வதே சிறப்பு!
என் படுக்கையில்
ஒரு கவிதை
இறந்து கிடந்தது...
இது கொலையா? தற்கொலையா?
ஏதும் அறியாமல்
விழி பிதுங்கி நின்றேன்...
கண்ணீர் வரவில்லை
மன அழுத்தம் மட்டும்
அகலமானது...
அதன் உறவினர்களுக்கு
நடந்ததை சொல்ல
ஏற்பாடுகள் செய்தேன்...
தற்கொலையாக இருந்தால்
என்ன காரணமாக இருக்குமென
மூளை கசக்கி யோசித்தேன்...
ஒருவேளை
கொலையாக இருந்தால்...
அந்த இரக்கமில்லாதவனை
நிச்சயம் தண்டிக்க வேண்டும்...
பிறகுதான் ஞாபகம் வந்தது
நேற்றிரவு பிழைகள் உள்ளதென
கிழித்தெறிந்த கவிதை இதுவென்று...
அருகே அமர்ந்து பேசும்போதும்,
அரட்டை அடிக்கும்போதும்,
துப்பட்டா விலகி
என் உள்ளாடை
வெளியே தெரிகையில்,
சற்றும் சலனம் இன்றி,
என் அனுமதியும் இன்றி,
அதை சரிசெய்துவிட்டு...
பாதியில் விட்ட கதையை
மீண்டும் தொடரும்
அவனுக்கும் எனக்குமான நட்பு...
பால் வேறுபாடுகளை கடந்தது!
ஒட்டடைக் கொம்புபோல்
ஒய்யார வடிவழகி ....!
ஒட்பமான நிறத்தழகி !
ஒப்பில்லா இனிப்பழகி !
தோலுரித்து கடிக்கச் சுவையாவாள் !
தோகை சிகையில் கொண்டிருப்பாள் !
தோட்டத்தில் அடர்ந்து வளர்ந்திருப்பாள் !
தோரணமாயும் சிறந்து நிற்பாள் ...!!
கன்னல் இவள்மிகத் தித்திப்பாள் !
கற்கண்டு சீனியாய் பிறப்பெடுப்பாள் !
கணுவாய் வெட்டித் தின்றிடலாம் !
கரும்புச்சாறு ருசித்துப் பருகிடலாம் !
காமன் கையில் வில்லானாள் !
காமாட்சி கரத்தில் ஏந்திநின்றாள் !
பட்டினத்தார் கையிலும் இடம்பிடித்தாள் !
பொங்கலுக்கு புதுவரவாய் வந்திட்டாள் ....!!
மகள் : ஏன் அப்பா கொசு ராத்திரியில மட்டும் நிறைய கடிக்க வருது .....
அது எப்ப அப்பா தூங்கும் .
அப்பா : அது தூக்கம் வரும் போது தூங்கும் ....
மகள் : எப்ப தூக்கம் வருமப்பா ?
அப்பா : அது சாப்பிட்டவுடன் தூங்கும் .........
மகள் : கொசுக்கு வீடு எங்கப்பா ?
அப்பா : அதுக்கு வீடே இல்லை ....
மகள் : ஏம்பா வீடே இல்ல .....
அப்பா : அது ரொம்ப சின்னதா இருக்கே அதான் வீடே இல்ல ........
மகள் : நான் ரொம்ப சின்ன பிள்ளை தானே எனக்கு வீடு இருக்கே .......
அப்பா : இது அப்பா உனக்கு கட்டி தந்தது .
மகள் : அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அப்பா .
அப்பா : அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா
பிரிந்தபோது தான் தெரிந்தது
நான்
அதிகாமாய் நேசித்தது.
யாருக்காகவும்,
எப்போதும் அடைத்துக் கொள்ளாத தொண்டை
அதிகமாக நேசித்த நண்பனை பிரிம்போது.......
பேச இயலாவில்லை.
நான் நானாக இருக்கிறேன்,
நீ நீயாக இரு.
நமக்குள்
நேசம் வந்தால் நேசிப்போம்.
உனக்குத் தாமரைப்பூ பிடிக்கும் என்பதற்காக
என்னைத் தாமரையாக மாற்றி விடாதே;
எனக்கு மல்லிகை பிடிக்கும் என்பதற்காக
நீயும் மல்லிகையாக மாறி விடாதே;
நான் நானாக இருக்கிறேன்,
நீ நீயாக இரு.
நமக்குள்
நேசம் வந்தால் நேசிப்போம்.
கழுகின் சிறகை வெட்டி
கூண்டில் அடைத்து
‘ஆகா, என் கழுகு
என்னிடமே இருக்கிறது’ என்று
நினைத்துக் கொள்வதில் என்ன பெருமை?
அது
சூரியனை மறைக்கும் சிறகுகளையும்
வேடர்களை அடித்துத் துரத்தும் வலிமையையும்
அடைந்த பிறகும்
உன்னைத் தேடி வந்து
உன் தோளில் அமருமானால்
அதுவல்லவோ பெருமை?
நான் நானா