காயத்ரிசேகர் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : காயத்ரிசேகர் |
இடம் | : பெரம்பலூர் |
பிறந்த தேதி | : 05-May-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 22-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 207 |
புள்ளி | : 65 |
எத்தனை நாட்களை
தாண்டிய சந்திப்பு நீ!
காய்ந்து கிடந்த
என் கருவிழிகளில் - இன்று
காற்றாற்று வெள்ளம்...
கரையில்லாமல் வழிந்தோடுகிறது,
கன்னங்களை கடந்து,
உதடுகள் வார்த்தைகளின்றி
உறைந்திட...
என் விழிகளின் விரதம்
இன்றுடன் முடிந்தது...
உன்னைக் கண்டதால்...!
எத்தனை நாட்களை
தாண்டிய சந்திப்பு நீ!
காய்ந்து கிடந்த
என் கருவிழிகளில் - இன்று
காற்றாற்று வெள்ளம்...
கரையில்லாமல் வழிந்தோடுகிறது,
கன்னங்களை கடந்து,
உதடுகள் வார்த்தைகளின்றி
உறைந்திட...
என் விழிகளின் விரதம்
இன்றுடன் முடிந்தது...
உன்னைக் கண்டதால்...!
முந்நூறு நாட்கள்
சிறைவாசம்!
முடிவில் தண்டனை!
வலியுடன் கூடிய விடுதலை!
எனக்கும்- என்னை சுமந்த
அவளுக்கும்!
அவள் சொர்க்கம் சென்றாள்
நான் நரகம் வந்தடைந்தேன்.
அறிமுகம் இல்லாத
அந்நியர்கள் மத்தியில்
அவளை மட்டும் தேடின
என் ஈர விழிகள்.!
பிறந்த அன்றே - எனக்கு
பெயர்சூட்டப்பட்டது
அநாதை என்று...!
உணவு மட்டுமே
உடனடி தேவையானது...
நாக்கு வறண்டு
நான் அழுகையில்,
பால் சுரந்து
பசியை தீர்த்தது
ரப்பர் காம்பு ஒன்று...!
அழுதேன்...
என்னால் முடிந்தவரை...
செல்லம் கொஞ்சி சீராட்டவும்,
என் பிறப்பை கொண்டாடவும்,
யாரும் இல்லை - என்பதை
பின்னரே உணர்ந்தேன்.
யாரோ ஒருவரால்
கொண்டு செல்ல
அவஸ்தையிலும் அவஸ்தை ....!!!
-----
காதலில் சிறு சண்டை ....
சிற்றின்பம் ....
நீ என்னுடன் புரியும் ....
சிறு சண்டையோ ....
பேரின்பம் ......!!!
காத்திருப்பது காதலுக்கு ....
சிற்றின்பம் .....
உனக்காக காத்திருப்பது ....
பேரின்பம் .....!!!
மௌனம்
காதலுக்கு அவஸ்தை ....
உன் மௌனம் ...
அவஸ்தையிலும் அவஸ்தை ....!!!
நகராட்சி தான்
எங்கள் ஊர்...
தெருவில் நிரம்பி
வழிகின்றன வீடுகள்..
வண்ண தீப்பெட்டிகள்
வரிசையாய்
அடுக்கப்பட்டது போன்று,
அழகானதொரு
மாயத்தோற்றம்...!
வெயில் சுடுகிறது,
மழை நனைக்கிறது,
கண்கள் மட்டும்
காவல் துறையைப்போல்
தீவிரமான
தேடுதல் வேட்டையில்...
வாடகைக்கு தேடுகிறது
வீடுகளை..!
இரண்டு வருடங்களுக்கு
ஒரு முறை,
வீடு மாற்றப்படும்
உள்ளூர் அகதிகளாய் நாங்கள்,
நிரந்தரமற்ற முகவரியில்..!
பால்காரர்,
பேப்பர் போடுபவர்,
தபால்காரர்,
கேபிள்காரர்,
சிலிண்டர் போடுபவர் - என
எல்லாமே புதிதாய்
ஒவ்வொரு முறையும்.
சட்டங்கள் போடும்
வீடு உரிமையாளர்களுக்கு
சாவி கொடுக்கப்பட
1.காதல் போர்க்களத்தில் இஸ்ரேல் இராணுவத்தின்
பீராங்கிக் கனை நீ என்பதால் உன்னை வெல்ல
விரும்பாமல் பலஸ்தீன் நாட்டு போராளியாகிறேன்.
******
2.ஆசையாய் நான் வளர்த்த தோட்டமும் காதலை போல்
ஏமாற்றியது.பூக்களை கேட்டால் இலைகளை தருகிறது.
******
3.என் உடைந்த புல்லாங்குழலை வாங்கி பலர்
கவிஞர்களாகிவிட்டார்கள்.நான் வாய் வைத்து
வாசித்தால் உன் தூக்கம்கெட்டு விடுமோ என்ற
ஐயத்தில் இன்று வரை காதலனாகவே வாழ்கின்றேன்.
******
4.என்னவள் நினைவுகளை கனவில் கடன் வாங்க மறுக்கிறேன்.
காதல் கொடுக்கல் வாங்கலில் வட்டி செலுத்த கண்ணீரில்லை.
******
5.நீ எவனை வேண்டுமானாலும் விருப்பத்தோடு மனமுடித்துக்கொள்
உனக்கு பிர
புத்தாண்டு தொடங்கியது..
நள்ளிரவில் கடிகாரம்
பன்னிரெண்டை காட்டியதும்,
கடவுளிடம் பிராத்தித்தேன்...!
இந்த ஆண்டின்
இந்த நிமிடம் முதல்,
உன் நினைவுகளற்ற
நாட்களை பழக வேண்டும் என..
கட்டுப்பாட்டை கடைபிடித்தேன்,
காலை வரை..
பொழுது விடிந்தது,
நாட்காட்டியில்
கடந்த ஆண்டின்
கடைசி பக்கத்தை
கசக்கி எறிந்துவிட்டு
குளியலுக்கு சென்றேன்...
தூக்கத்தில் முனகும்
குழந்தையை போல
சிணுங்கியது என் செல்போன்..
நீயாக இருப்பாயோ என
நான் நுரையோடு
ஓடி வர...
கசங்கிய நாட்காட்டியின் காகிதமும்
என்னை கண்டு
கேலியாய் நகைக்கிறது...!
காதல் இது தானோ..
"புத்தகம் பரிசளிப்போம்" என்கிற இந்தத் தொடர் சங்கிலியில் இணைய விருப்பமுள்ள புத்தகப்பிரியர்கள் (இந்தியாவில் வசிப்பவர்கள் மட்டும்) இணையலாம். திட்டத்தின் படி நீங்கள் ஒரேயொரு புத்தகத்தை குறிப்பிட்ட நபருக்கு பரிசளிக்க வேண்டும். அதே சமயம் உங்களுக்கு ஒன்றிலிருந்து பத்து புத்தகங்கள் வரை கிடைக்க வாய்ப்புண்டு.புத்தகம் பரிசளிக்க விரும்பும் நண்பர்கள் மட்டும் பின்னூட்டமிடவும். விவரங்களை உள்பெட்டியில் அனுப்புகிறேன்.GIFT A BOOK. I need at least three people (residing in India) of any age to participate in this book gifting chain. You have to send one book to one person and you will receive at least six to nine in return. Comment on this post if you are interested and I'll message you the details. Please do it if you actually intend to gift a book.
மனித மலங்கள்,
மாநகர கழிவுகள்,
குப்பை தொட்டிகள்,
குரைக்கும் நாய்கள்,
அட்டைப்பூச்சிகள்,
அருவருப்பூட்டும் புழுக்கள்,
எல்லாம் பழகிவிட்டது..
எங்களுக்கு..!
கரிய உடல்,
கறைப்படிந்த பற்கள்,
எண்ணெய்வழியும் thalai,
நாணலாய் குறுகிய மேனி,
உணர்வுகள் உணர்ச்சிகள்
உறைந்த நிலையில்
நாங்களும் மனிதர்கள் தான்.
உங்கள் கழுவுகளைக்கண்டு
நீங்களே முகம் சுழிக்கையில்,
நாங்கள் அவற்றை
சுத்தம் செய்கிறோம்..
பணத்திற்காக மட்டுமல்ல,
பலரின் நன்மைக்காக..!
நாட்டை காக்கும் பணியில்
விளிம்பில் ஒரு கூட்டம்...
கழிவில் ஒரு கூட்டம்...
எனினும்,
நல்ல உடை உடுத்தவும்
நாங்கள் குடுத்துவைக்கவில்லை..
நற
மனித மலங்கள்,
மாநகர கழிவுகள்,
குப்பை தொட்டிகள்,
குரைக்கும் நாய்கள்,
அட்டைப்பூச்சிகள்,
அருவருப்பூட்டும் புழுக்கள்,
எல்லாம் பழகிவிட்டது..
எங்களுக்கு..!
கரிய உடல்,
கறைப்படிந்த பற்கள்,
எண்ணெய்வழியும் thalai,
நாணலாய் குறுகிய மேனி,
உணர்வுகள் உணர்ச்சிகள்
உறைந்த நிலையில்
நாங்களும் மனிதர்கள் தான்.
உங்கள் கழுவுகளைக்கண்டு
நீங்களே முகம் சுழிக்கையில்,
நாங்கள் அவற்றை
சுத்தம் செய்கிறோம்..
பணத்திற்காக மட்டுமல்ல,
பலரின் நன்மைக்காக..!
நாட்டை காக்கும் பணியில்
விளிம்பில் ஒரு கூட்டம்...
கழிவில் ஒரு கூட்டம்...
எனினும்,
நல்ல உடை உடுத்தவும்
நாங்கள் குடுத்துவைக்கவில்லை..
நற
கவிழ்ந்து கிடக்கும்
உன் எண்ணக்
குறிப்புக்களை
இமைகளால் சொருகி
மெல்ல இழுக்கிறேன்
என்
உணர்வுத்
தழுவல்கள்
என்னைப் போல
உன் விழிக்கணைகளை
விலத்தி விடுவதாய் இல்லை
சொருகுப்பட்ட
கண்ணசைவுகள்
எடுபட முடியாமல்
என் உன்
ஈர்ப்பு விசை வளர்ந்து
எல்லை கடக்கிறது
இமைகள்
ஒட்டிக் கொண்டே
தழுவமுடியாமல்
நினைவுக்
கதகதப்புக்கள்
உட்கார்ந்து
உதறிக் கொல்கிறது
நடுநிசியின்
நிசப்தத்தில்
நர்த்தனத்தில் சுழலும்
விழிகளுக்குள்
உன்
உயிரோட்டக் கனவுகள்
வழிந்து கிடக்கிறது
உன் மென்மையின்
அருகாமை
பிரபஞ்சத்தின்
தளிர்த்தலில்
ஓர்
இளவேனில் என்பது
கருகும் கருக்கலி
எழுத்து தளத்தில் எனது பயணம் 3 வருடம் பூர்த்தி
7 Dec 20125:31 pmகண்ணீரில்
...................................................
எழுத்தில் எனது மொத்த பதிவுகள்
#### கவிதை 6879 சொந்த கவிதைகளே பதிந்துள்ளேன்
மொத்த தேர்வு 25775 இது இன்னுமொரு சாதனை இது எப்படி நடந்தது என்பது ஒரு புதிராக உள்ளது. கடின உ ழைப்புக்கு கிடைத்த மகா வெற்றி . -------
இங்கு 3 நபருக்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும்
1) HARI HARA NARAYANAN.V
2)AUDITOR SELVAMANI
3)Mohamed Sarfan
அண்ணன் ஜின்னா அண்ணன் பழனி குமார் மற்றும் மூத்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்
எழுத்தில் உள்ள பலம் அதிகம் என்றாலும் எழுத்தில் எனக்கு புரியாத விடயங்களும் உண்டு
1) இதை இயக்குபவர்கள் ஒருவரா....? பலரா ....? யாருடன் தொடர்புகொள்வது ...? பல sms போட்டேன் பதில் வரவில்லை ;குறிப்பாக எனது ப்ரோபிலே பெயரை கவிப்புயல் இனியவன் என்று மாற்றி தருமாறு பலமாதங்களுக்கு முன் கேட்டேன் பதில் வரவில்லை . மாற்றப்படவும் இல்லை .
2) பரிசு பெற்ற கவிதைக்குள் எனது கவிதை தெரிவாகவில்லை . இதற்கு நான் பிற பதிவுகள் பதிவதும் காரணமா ..? கட்டுரை கதை நகைசுவை (பிறர் பதிவுகள் ) அல்லது அதிக வாக்கு பெறாமையா ...?வாக்குக்கு பலருடன் வாக்கு கேட்க வேண்டும் .அதை நான் செய்ய முடியாது .எனது பணிசுமை தனிநபருடன் தொடர்பு கொள்ள இடமளிபப்தில்லை .
3) என்றாலும் இதுவரை எனக்கு ஊக்கம் தந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி .எனது வேலை பழுவும் .வயதும் முன்னர்போல் பதிவுகளை மேற்கொள்ள இடமளிக்குமா ..? என்பது கேள்விக்குறியாக உள்ளது .
வாராந்தம் 500 கிலோ மீற்றர் பயணம் செய்கிறேன் .( போய் திரும்பி வர 1000 கிலோ மீற்றர் ) இதுவரை பேருந்தில் இருந்து கூட கவிதைகள் போட்டிருக்கிறேன் . நள்ளிரவு 1மணி 2 மணி க்கு எல்லாம் கவிதை எழுதி மறுநாள் வீடு வந்து கணனியில் பதிவேன் . இவ்வாறு கடினபட்டே இந்த சாதனையை அடைந்தேன்
திருக்குறளை கவிதையாக்கி பதிந்தேன் .(இன்பத்துப்பால் ) இன்று அதற்கு பெரிய முக்கிய துவத்தை வாசகர் தரவில்லை என்றாலும் ஒரு காலத்தில் அது திரும்பி பார்க்கப்படும்
நன்றி