வாடகை வீடு

நகராட்சி தான்
எங்கள் ஊர்...

தெருவில் நிரம்பி
வழிகின்றன வீடுகள்..
வண்ண தீப்பெட்டிகள்
வரிசையாய்
அடுக்கப்பட்டது போன்று,
அழகானதொரு
மாயத்தோற்றம்...!

வெயில் சுடுகிறது,
மழை நனைக்கிறது,
கண்கள் மட்டும்
காவல் துறையைப்போல்
தீவிரமான
தேடுதல் வேட்டையில்...
வாடகைக்கு தேடுகிறது
வீடுகளை..!

இரண்டு வருடங்களுக்கு
ஒரு முறை,
வீடு மாற்றப்படும்
உள்ளூர் அகதிகளாய் நாங்கள்,
நிரந்தரமற்ற முகவரியில்..!

பால்காரர்,
பேப்பர் போடுபவர்,
தபால்காரர்,
கேபிள்காரர்,
சிலிண்டர் போடுபவர் - என
எல்லாமே புதிதாய்
ஒவ்வொரு முறையும்.

சட்டங்கள் போடும்
வீடு உரிமையாளர்களுக்கு
சாவி கொடுக்கப்பட்ட
பொம்மைகள் நாங்கள்...!

உயிரை குடிக்கிறது வறுமை,
மானம் உணர செய்கிறது
மற்றவர்களின் ஏளன பேச்சு!

இரவுகளில்
சத்தமின்றி அழுகிறோம்
யாருக்கும் தெரியாமல்.

மூட்டைக்கட்டி கடத்தப்படும்
எங்கள் வீட்டின் பொருட்கள்
மூச்சின்றி அழுகிறது,
எங்களின் நிலைக்கண்டு...

ஓட்டை விழுந்த பலூனை
ஊத்தி களைத்த குழந்தையாய்,
வாடகை வீட்டிலேயே கழிகிறது
எங்கள் வாழ்க்கை..!

ஆம்,
வாடகை எங்களின்
வாடிக்கையாகிவிட்டது..!
எங்கள் முகவரி
முகம் சிதைந்துவிட்டது..!

எழுதியவர் : காயத்ரிசேகர் (3-Jan-16, 8:43 pm)
Tanglish : vaadagai veedu
பார்வை : 182

மேலே