மாறாத சின்னங்கள்

கதிர் அருவாவும் சுத்தியும்
அச்சடித்த சிகப்பு கொடி கட்டி..
மார்க்ஸ் லெனின் சே வின்
புகைப்படம் வைக்கப்பட மேடையில்..
'உழைக்கும் மக்களுக்கே இவ்வுலகமென'
பொதுவுடைமை சித்தாந்தங்களை
வானம் இடிய பூமி உடைய
பெரும்திரள் மக்களிடையே பேசி..
பெரியார் அண்ணா காமராசர் கொள்கைகளை
இடையிடையே நினைவுகூர்ந்து..
மேடைவிட்டு இறங்குகையில்
இரண்டு மூத்தகுடிகள் பேசிக்கொள்கிறார்கள்..
'நா எப்பவும் ஒதய சூரியன் தான்,
நீ எப்பவும் ரெட்ட எல தான'....

எழுதியவர் : கோபி சேகுவேரா (3-Jan-16, 7:21 pm)
பார்வை : 71

மேலே