உன்னை கண்டதால்
எத்தனை நாட்களை
தாண்டிய சந்திப்பு நீ!
காய்ந்து கிடந்த
என் கருவிழிகளில் - இன்று
காற்றாற்று வெள்ளம்...
கரையில்லாமல் வழிந்தோடுகிறது,
கன்னங்களை கடந்து,
உதடுகள் வார்த்தைகளின்றி
உறைந்திட...
என் விழிகளின் விரதம்
இன்றுடன் முடிந்தது...
உன்னைக் கண்டதால்...!