போதிக்கும் போதனையா

பாடம் கற்பதற்கு
பள்ளிக்கு வந்தாயோ!—இல்லை
பாடம் சொல்லிதர
பாரில் பிறப்பெடுத்தாயோ!

பிறப்பெடுத்து
பெற்றவளை
மலடி இல்லையென்று
மக்களுக்கு புரிய வைத்தது நீ தானே

அழுது, அடம்பிடித்து
அனைத்தையும் பெற்று
இவன் குழந்தைதானே என—அன்னையை
அன்பு காட்ட வைத்ததும் நீ தானே

கடலை மிட்டாயை
காக்காக்கடி மூலம்
கூடி தின்ற நண்பர்களுக்குக்
கற்று கொடுத்ததும் நீ தானே

செய்யும் குறும்பால்
சொல்லி தரும் ஆசிரியரின்
பொறுமையை சோதிக்கும்
பாடம் எடுத்து பாஸாக்குவதும் நீ தானே

சொல்லுங்கள் இப்போது
சொல்லித்தருவது ஆசிரியர்களா?—இல்லை
பொல்லாத பிள்ளைகள் அநுபவத்தில்
போதிக்கும் போதனையா!

எழுதியவர் : கோ. கணபதி. (18-May-17, 2:09 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 52

மேலே