யாரிடம் முறையிட
விழாக்கள், வைபவங்களென
வந்து போகும் திருநாட்களில்
பருவமாற்ற அழகினையும்
மெருகேற்றி அரங்கேற்றும்
உனது கலைத்திறனில்
உருவான புகைப்படங்களை
வீடெங்கும் மாட்டி வைத்து
விருந்தினரோடு மகிழ்ந்து
சேர்த்த பெருமைதனை
இருக்குமிடம் தெரியாமல்
ஏதோ ஒரு இடத்தில்
ஒளித்து வைத்து
எடுத்த புகைப்படங்கள்
உனது பெருமைகளை
அழித்து போனதே
அவமானமில்லையா!
தொழில் நுட்ப வளர்ச்சியில்
மதி நுட்பம் வக்கிரம் கொள்கிறதே!
யாரிடம் முறையிட?