ஆண் - பெண் - நட்பு

அருகே அமர்ந்து பேசும்போதும்,
அரட்டை அடிக்கும்போதும்,
துப்பட்டா விலகி
என் உள்ளாடை
வெளியே தெரிகையில்,
சற்றும் சலனம் இன்றி,
என் அனுமதியும் இன்றி,
அதை சரிசெய்துவிட்டு...
பாதியில் விட்ட கதையை
மீண்டும் தொடரும்
அவனுக்கும் எனக்குமான நட்பு...
பால் வேறுபாடுகளை கடந்தது!

எழுதியவர் : காயத்ரிசேகர் (29-Nov-15, 7:43 pm)
பார்வை : 517

மேலே