அறிவிப்பு செய்யாத அரசனே தவறு உடையவன்
அறிவிப்பு செய்யாத அரசனே தவறு உடையவன்
“காலஞ்சாலா இளமையோன் வயின்
ஏமஞ்சாலா இடும்பை எய்தி
நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால்
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்
சொல்லெதிர் பெறா அன் சொல்லி இன்புறுதல்
புல்லித் தோன்றும் கைக்கினைக் குறிப்பே” (தொல்காப்பியம் பொருள்: 50)
என்னும் தொல்காப்பிய நூற்பாவுக்கு ஏற்ப, கலித்தொகைப் பாடலில் ஒரு காட்சி, தலைவி மறுமொழி ஒன்றும் கூறாவிட்டாலும் அவள் எழில்நலத்தைப் புனைந்துரைத்து அவளிடம் கைக்கிளைக் காதல் கொண்டு சில சொற்கள் சொல்லி இன்புறும் தலைவன் ஒருவன் கூறும் சொற்கள் நமக்கு நகைச்சுவை விருந்தளிக்கின்றன.
“பெண்ணே! நீ சிற்பக்கலை வல்லவன் செதுக்கிய பாவையோ? அழகிய பெண்களின் உறுப்பு நலன்களையெல்லாம் ஒன்றி திரட்டி நான்முகன் உருவாக்கிய அழகியோ? கூற்றுவன் உலகத்தவர் மீது வெறுப்பு கொண்டு தானே எடுத்து வந்த பெண் வடிவமோ?” நீ இவ்வாறு அழகே உருவாக நடந்து வீதி வழியாக வந்தால் நின்னைப் பார்க்கும் இளைஞர்கள் உயிரையெல்லாம் நின் அழகு பறித்துவிடும் என்பதை உணராமல் நீ விதி வழியே வருகிறாய் என் போன்ற இளைஞர்கள் படும் துன்பம் அறியாமல் - மறு மொழியும் கூறாமல் நடந்து செல்லும் பெண்ணே! இங்ஙனம் எங்கள் உயிர் பறிக்கின்ற உன் மீதும் தவறு இல்லை. உன்னைத் தெருவில் நடமாட அனுப்பி வைத்த நின் பெற்றோர் மீதும் தவறு ஒன்றும் இல்லை. தெருவில் மதங்கொண்ட யானை ஒன்றினை நீர்நிலைக்குக் கொண்டு செல்லும் போது “மதயானை வருகிறது விலகிச் செல்லுங்கள்” என்று பறையறைந்து அறிவிப்பது போல நீ தெருவில் நடந்து வரும் வேளையிலும் பறையறிந்து நின்னைக் காணாமல் கண்களை மூடிக் கொள்ளுமாறு அறிவிப்புச் செய்யாத அரசனே தவறு உடையவன்” என்று தலைவன் கூறினான்.
மதங்கொண்ட யானை போலத் தலைவியின் அழகும் காண்பவரைக் கலங்க வைக்கும் பேரழகு என்று தலைவன் கூறியது நகைச்சுவையுணர்வு மிக்க கற்பனையாகும்.
“நீயும் தவறு இலை நின்னைப்புறங்கடைப்
போதரவிட்ட நுமரும் தவறு இலர்
நிறையழி கொல்யானை நீர்க்கு விட்டாங்குப்
பறையறைந்து அல்லது சொல்லற்க என்னா
இறையே தவறு உடையான்” (கலித்தொகை 56 குறிஞ்சிக் கலி 20)
என்பது குறிஞ்சிக் கலியில் அமைந்த நகைச்சுவை.
ஈங்கே வருவாள் இவள் யார் கொல் ஆங்கே, ஓர்
வல்லவன் தைஇய பாவைகொல் நல்லார்
உறுப்பு எலாம் கொண்டு, இயற்றியாள்கொல் வெறுப்பினால்,
வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம்கொல் ஆண்டார்,
கடிது, இவளைக் காவார் விடுதல் கொடி இயல்