ரமணன் சொல்லுமுன் கேட்டவர்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
..............................................................................................................................
பருவ மழை வருவதற்குப்
பத்து நாள் முன்பாக
கூடு மாற்றின- என்
தோட்டத்துச் சிற்றெறும்புகள்...
முப்பது கைப்பிடி மண்ணை
முட்டி முட்டித் தள்ளின..
முட்டை தூக்கிச் சென்றன
முதலிரண்டு நாட்கள்..
அரிசி முதலான தீனிகள்
அடுத்த மூன்று நாட்கள்..
குட்டி எறும்புகளின் அணிவகுப்பு ஒருநாள்..
அடடே... இது என்னது?
டண்டணக்க... டணக்கணக்க.... பூம்..
செத்த எறும்புகளையும் விட்டு விடவில்லை...
பொழிந்த மழையில்
எறும்பு மிதந்ததாய் ஞாபகமில்லை..
பெருமூச்சுதான் வருகிறது...
ஹூம்..!