தோன்றுகிறது……
 
            	    
                செங்கற்களை
ஒருவர் போட ஒருவர் பிடிக்கும் உடலசைவு..
பேருந்தில்
கடைசிக் கால்தடத்துக்கும்
நடத்துநரின் விசிலுக்குமுள்ள ஒத்திசைவு....
மனைவி 
பார்க்கும் திசையில் நடக்கும் கணவரின் 
புரிந்துணர்வு.. 
நாய்க்குட்டியின்
வீசும் இரைக்கும் கவ்வும் வாய்க்குமான
சுறுசுறுப்பு…
காணும் போதெல்லாம் கருத்தில் தோன்றும்
எதுகை மோனை எனும் சிறப்பு..
	    
                
