உயிரே ஊற்றின்பமே
அன்பே ஆருயிரே!
உன் உதட்டின் ஓரத்தின் சினுங்கல் சிரிப்பு
ஒரு நூறு கதைகளை சொல்கிறதே
உன் கடைக் கண்ணின் குறும்புப் பார்வை
ஓராயிரம் கனவுகளை அபிநயிக்கிறதே
உன் அலைபாயும் தொண்டைக்குழி ஒலி அசைவில்
ஒருலட்சம் ஸிம்ஃபொனி கேட்கிறதே
உன் விரல்நுனி செல்லத் தீண்டலில்
ஒருகோடி சிறகுகள் மனதில் பறக்கிறதே.
இன்பமே இதயமே!
உன்னருகே பார்த்திருக்கும் இந்த நிமிடம் போதும்
உன்னொலி கேட்டிருக்கும் இந்த நொடி போதும்
இதை மட்டும் தினந்தோறும் வரமாய் தந்துவிடு
இந்த இன்பம் தாண்டி எனக்கொன்றும் வேண்டாம்.
உயிரே ஊற்றின்பமே!