நமக்கு கிடைத்த வரம்

மரங்கொத்தியின்
பொந்துக்குள்
கிளிகளின் வாழ்க்கை

காக்கையின்
கூட்டில்
குயிலின் குஞ்சுகள்

எறும்பின் புற்றுக்குள்
நாகத்தின்
வாழ்வு

வண்டுதுளைத்த
மூங்கிலுக்குள்
தென்றலின் வரவு

நதிவருடிய
கூழான் கற்களுடன்
சிறுவர்கள்

ஆலம் விழுதுகளில்
ஊஞ்சல்கட்டி ஆடும்
சிறுமியர்

இரவின் மடியில்
உலகின்
பகல் பொழுது

இயற்கை
இறைவனின் படைப்பு
அதில் நமது
இயைந்த வாழ்வே
நமக்கு கிடைத்த
வரம்....!

..........கா.ந.கல்யாணசுந்தரம்

எழுதியவர் : கா.ந.கல்யாணசுந்தரம் (27-Apr-16, 9:43 pm)
பார்வை : 131

மேலே