தன்முனைக் கவிதைகள்

மாசு படிந்த சூழல்
சுமக்கத் தயாராய் இருங்கள்
பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு
பிராணவாயுக் குப்பிகள்

ரசிகர்கள் கூட்டத்துடன் ஆடியபடி
வருகிறாள் கரகாட்டக்காரி
தேரை வடம் பிடித்திழுக்க
யாரையும் காணவில்லை

குளத்தில் தவமிருக்கும் கொக்கு
மீனைக் கொத்தாமல் விடுவதில்லை
வற்றிய குளத்தின் சுவடுகள்
பேசிப்பேசி அங்கலாய்க்கின்றன

முள் நிறைந்த காடு
முகம் சுளிக்காமல் வருகிறாய்
எப்படி சாத்தியமாகிறது
தென்றலே உனது வருகை ?

தனிமையில் நடக்கும் போது
பாதைகள் எப்போதுமே நீளும்
உன்னுடனான பயணிப்பில்
தென்றல்மட்டுமே குறுக்கீடு
.....கா.ந.கல்யாணசுந்தரம்

எழுதியவர் : கா.ந.கல்யாணசுந்தரம் (5-May-20, 11:02 am)
பார்வை : 170

மேலே