சிலம்புச் செய்திகள் - குறும்பா வடிவில்

சிலம்புச் செய்திகள்
குறும்பா வடிவில்....


*************************************************


*மரபுவழி மங்கள நாணொடு
புகாரில் மனையறம் கொண்டாள்...
கற்புக்கரசி கண்ணகி !


*மாசறு பொன்னுடன்
நல்லறம் சிறக்க இல்லறமானது...
கோவலனின் வாழ்வு !


*தன்னிலை மறக்கும்
சொர்க்கபுரியானது...
நரவுப்பட்டின வசந்தவிழா!


*விடுதலை அறியா
விருப்பினனாகினான்...
கோமகன் கோவலன்!


*யாழிசை மீட்டியபடி கடலாடிய
கானல்வரிப் பாடல்கள்...
கோவலனோடு மாதவி !

*ஆடல்மகள் மாதவியின் கூடலில்
குன்றமன்ன பொருளிழந்தான்...
குற்றமற்ற கண்ணகியின் கணவன்!


*ஊழ்வினை உறுத்த
மாதவியின் கரம் நெகிழ...
கோவலனின் அடுத்த பயணிப்பு !


*பயனின்றி போனது
மாதவிக்கு ...
தோழி வசந்தமாலையின் தூது !


*விடியும்முன் நெடும்பயணம்
கவுந்தி அடிகளோடு
மதுரை மாநகர்க்கு


*கௌசிகன் மாடலன் மாதரி
இவர்களுடன் வாழ்வு...
சிலகாலமே கண்ணகிக்கு !


*சூழ்ச்சிமிகு பொற்கொல்லன்
ஆராயாத அந்தப்புர அரசன் ...
கொலைக்களம் கண்டான் கோவலன் !


*ஒற்றைக் காற்சிலம்பு
மாணிக்கப்பரல் தெறிக்கும் சாட்சியால்...
நீதி பிறக்க மதுரை எரிந்தது !


*போற்றா ஒழுக்கம் புரிந்தாலும்
மாறா உளத்திரத்தால்
பாட்டுடைத் தலைவியானாள் கண்ணகி !


*மலைவளம் கண்ட சேரன்
செங்குட்டுவன் அமைத்தான் ...
பத்தினிக்கோட்டம் கண்ணகிக்கு !


........கா.ந.கல்யாணசுந்தரம்

எழுதியவர் : கா.ந.கல்யாணசுந்தரம் (12-May-16, 8:13 pm)
பார்வை : 88

மேலே