புதிய பாரதி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  புதிய பாரதி
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  09-Jun-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Mar-2014
பார்த்தவர்கள்:  243
புள்ளி:  29

என்னைப் பற்றி...

கவிதை கனவுகள் ....விடைதேடும் நினைவுகளோடு தேடுகிறேன் வலைத்தளங்களை ...எதுவாய் நினைகின்றாயோ அதுவாய் நான் ...

என் படைப்புகள்
புதிய பாரதி செய்திகள்
புதிய பாரதி - கனகரத்தினம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2015 3:12 am

இருளில் பிறந்த சுதந்திரமே
விடிய லென்பது உனக்கு கிடையாதா ?
யார் போட்ட மந்திரமோ
வார்ப்பானது தந்திரமே !

ஐந்தாம் தலைமுறை வந்தாச்சு
விண்வெளி ஓடத்திலும் உன்பெயர் வச்சாச்சு
விவசாய நிலமெல்லாம் தரிசாச்சு
விஞ்ஞானம் மட்டும் வளர்த்தாச்சு !

நீ கண்ட மூத்த குடி கருகி சருகாச்சு
நீலி கண்ணீரும் வடிச்சாச்சு
நீலகடலையும் இழந்தாச்சு
நீதி கண்கள் குளமாச்சு !

வந்தவரெல்லாம் வாரி சுருட்ட
வெந்தவரையெல்லாம் ஓட விரட்ட
வெண்தரையும் சிவப்பாச்சு
விடியல் சிவப்பை காணலையே !!

குடியரசு தினமும் பிறந்தாச்சு
குடிமக்கள் வாழ்வையழிக்கும் குடி திறந்தாச்சு
குற்றமெல்லாம் நீதியாச்சு
குட்

மேலும்

பார்வைக்கும் கருத்திற்கும் நன்றி தோழரே ! 15-Feb-2015 3:12 am
விழிகள் திறந்தாள் மிரண்டிடுமோ!நன்று ! 29-Jan-2015 4:06 am
மிகவும் நன்று. வலிகளை உணர்த்துகிறது அழுத்தமாக. 28-Jan-2015 3:50 pm
நன்றி கயல் ! 27-Jan-2015 10:14 pm
புதிய பாரதி - கனகரத்தினம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jan-2015 6:10 pm

உனக்குள்ளே ஒழிந்த கோழையை ஓட்டு
மனதுள்ளே துயிலும் உறமதை கூட்டு
நேதாஜி வழியதனை எதிரிக்கு காட்டு
சிதறியோடும் வீணர்களை சிறையிட்டு பூட்டு !

பணமென்னும் பாதாளத்தில் விழுந்து பரிதவிக்கும்
பண்பாளனை மேடைமேல் ஏற்று
அறமெனும் அறிவுதனை அகிலத்தில் மெருகூட்டு
அகிம்சையை மலையேற்றி தர்மத்தை நிலைநாட்டு !

பஞ்சமா பாதகனை பலியிட்டு
துச்சமாய் நினைத்தவனை துகிலுரித்து
அச்சமென்றால் என்னவென்று அவனுக்கு காட்டு
பஞ்ச சீல நீரினை நாடெங்கும் ஊற்று !

பஞ்சம் பசியெங்கும் தலைவிரித்தாட
நெஞ்சம் குளிருடன் இமயத்தில் போராட
குளுகுளு அறையில் கொஞ்சும் தலைவனை
தலை கொய்யாது ! தலையில் வைத்து கொண்டாட

நாடி அடங

மேலும்

பூ புயலாக கண்டேன் !நன்று ! 29-Jan-2015 4:05 am
கருத்திற்கு நன்றி ராஜன் ! 25-Jan-2015 9:30 pm
முதல் கருத்தாய் தந்த சகோதரிக்கு நன்றி ! 25-Jan-2015 9:29 pm
எழுச்சியூட்டும் வரிகள் ! அருமை ! 24-Jan-2015 10:23 pm
புதிய பாரதி - கனகரத்தினம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2015 4:51 pm

அன்பு பொங்கும் என் நண்பா !
நற்பண்பு தந்தே பாசம் வைத்தாய்!
வம்பு செய்தென்னை ஏற்றாய் நன்று!
வாசம் வீசும் இந்நாள் !

அன்பை பெற்று தெம்பாகி சூடாறி
வாழ்வில் இன்பம் பெற்றோம் இன்று !
ஆண்பா லானனான் ஆசை கண்டேன்
பெண் மோகத்தின் பிறப்பு !

வெண்பா ஈட்டி இன்புற்று பண்புற்று
மாலை சூடி வாகை சூடும் நாளெண்ணி
நம்பிக்கை கொண்டே நாம் வாழ்வோம்
மண்ணில் வாழும் மலர் !! .

(குறிப்பு :நேரசை வெண்பாவில் ஓர் புதுமுயற்சி பிழையிருப்பின் சுட்டுக )

மேலும்

நேரசை இல்லை நேரிசை வெண்பா என்பது சரி நேரிசை வெண்பா இரண்டாம் அடியில் தனிச் சொல் பெற்று வரும் அடிக்கு நாலு சீர் வேண்டும் .ஈற்றடி ஈற்றுச் சீர் ஓரசையாய் இருத்தல் வேண்டும் .எனது தொகுப்பில் வெண்பா விதிகள் இன்னிசை நேரிசை வெண்பாக்கள் ப ஃ றொடை வெண்பாக்கள் பதிந்திருக்கிறேன் . படித்துப் பாருங்கள் பயன் தரும் . அன்புபொங்கும் என்னிய நல்லிதய நண்பனே நேர் நிரை நேர் நேர் நிரை நேர் நிரை நேர் நிரை கூவிளங்காய் கூவிளம் கூவிளம் கூவிளம் காய் முன் நேர் விளம்முன் நேர் -----தளை சரி மற்ற வரிகளையும் சீரமைத்து அடிகளாக்குங்கள் முழு வெண்பா கிடைக்கும் முதலில் இன்னிசை பழகுங்கள் . அன்புபொங்கும் என்னிய நல்லிதய நண்பனே நற்பண்பு உன்னருங்கு ணம் நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் தேமாங்காய் கூவிளங்காய் நாள் என்பது போல் ணம் ஓரசைச் சீர் ---இது குறட் பா .அல்லது ஈரடி வெண்பா மூன்றடி கொண்டது சிந்தியல் வெண்பா நான்கு அடி கொண்டது அளவடி வெண்பா அதற்கு மேல் ப ஃ றொடை வெண்பா ஆர்வத்தை பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் கனகரத்தினம் அன்புடன்,கவின் சாரலன் 30-Aug-2015 7:42 pm
வெண்பா !பயற்சியின்றி முயற்சித்தால் வம்பாகும் .நன்று ! 29-Jan-2015 4:04 am
உங்கள் வருகையையும் கருத்தையும் தொடர்ந்து எதிர்பார்க்கும் சீடனாக நான். வெண்பா பழகிட உங்கள் அன்பான அறிவுரை ஏற்கும் அடியேன் யான் .எழுதுகிறேன் எனது முயற்சி வெண்பாக்களை அவ்வப்போது வந்து ஆசி வழங்குங்கள் நன்றி ! 24-Jan-2015 3:24 pm
வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதி எழுதி பழகும் போது முயற்சி திருவினையாக்கும். இறுதி நான்கு அடிகள் ஆசிரியத்துறை ஆகும். வெண்டுறை அல்ல. முடிந்தவரை திருத்தி உள்ளேன். அன்பு பொங்கும் எனது நண்பாநற் பண்பிணைத் தந்தே பாசம் வைத்து வம்புசெய் தென்னை ஏற்றிடுமின் நன்று கும்பிட்டேன் கைகூப்பி நின்று அன்பைப் பெற்ற தெம்பால் அகம்மகிழ்ந்து வாழ்வில் இன்பம் பெறவோ இன்றும் பெண்மை மீது கொண்டேன் காதல்நற் பண்பால் பெறுவேன் சிறப்பு வெண்பா தீட்டும் எண்ணம் கொண்டேன் இன்புற்று வாழ இவ்வுலகில் கண்டேன் கனவு நிறைவேறும் நாளில் நிற்பேன் மனம்வீசும் மலராய் மண்ணில் 22-Jan-2015 1:25 pm
புதிய பாரதி - கனகரத்தினம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jan-2015 9:54 am

கும்மியடி பெண்ணே கும்மியடி
குலம் தழைத்து செழிக்க கும்மியடி!

முத்தின நெல்லை அறுத்துபோட்டு
களத்துமேட்டில் அடித்து கட்டு !
காவலனான உழவன் காலை
தொட்டு தொட்டு வணங்கிபுட்டு...! (கும்மியடி ...)

மாமன் மகன் மூடுபனி
மூடி படுத்த நெல்மணி
அமுக்கிபுட்ட அசதியில்
சாய்ஞ்சு கிடக்கா கண்மணி !
களத்துமேட்டில் அவுத்து போட்டு
தலையை நல்லா உலர்த்திக் கட்டு...! (கும்மியடி ...)

மூடிகிடக்கும் சிப்பிக்குள்ள
முத்து முத்தா பச்சரிசியுந் தானிருக்கும்புள்ள
பத்திரமாக எடுக்காட்டி பதராகக் கூடும்புள்ள
பதறாம நீயெடுத்து பக்குவமாக சேருபுள்ள...! (கும்மியடி ...)

பத்து மாதம் சுமந்த சம்பா

மேலும்

அருமை ! 29-Jan-2015 4:01 am
கருத்தினில் மண்வாசனை வீசுது !நன்றி ! 24-Jan-2015 3:19 pm
மண்ணின் வாசனை வீசுகிறது அருமை 22-Jan-2015 2:55 pm
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ! 17-Jan-2015 12:47 pm
புதிய பாரதி - கனகரத்தினம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jan-2015 12:13 am

தொடர்வண்டி ஓட்டத்திலே
தொங்கிக்கொண்டு போறேனானே
போகிற போக்கிலதான்
எட்டி எட்டி பார்க்கிறேன்...!

எத்தனை பெட்டியென்று
என்னி எண்ணி பார்க்கிறேன்!
இத்தனை பெட்டியையும்
இழுத்து செல்லும் இஞ்சின் நிலை என்னவாகும்?!!

இயந்திரம் தான் இஞ்சினென நானறிவேன்!
இருந்தாலும் எனக்குள்ளே இருதயம் துடிக்கிறதே!
நெருப்பாக இஞ்சின் தகதகிக்க பின்னாலே
ஏசியில பலர் குளுகுளுன்னு இலவசமா பயணிக்க...!

மாண்புமிகு மந்திரியும் ஓசியில குந்திக்கொண்டு
மக்கள்பணி செய்யசொல்லி இலவசமா தந்த இடத்தில்
மனையாளில்லா மகளிரோடு களப்பணியில் மூழ்கிடவே
மக்களோடு மக்களாக மானம்கெட்டு போறாரே!!

காசுகொடுத்து பயணிக்கும் உழ

மேலும்

கருத்திற்கு மிக்க நன்றி ! 09-Jan-2015 11:33 pm
மிக அருமையான படைப்பு ..... 09-Jan-2015 11:28 pm
புதிய பாரதி - கனகரத்தினம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jan-2015 10:59 pm

ஏர் ஓட்டப் பழக்கியவன்
கார் ஓட்டப் பழக்கல !
சோறுபோட பழகியவன்
தார் ரோட்டை பார்க்கல !!

மனுஷ மனதை படிச்ச மனிதன்
பள்ளிகூடம் பக்கம் போகல !
பள்ளி கூடம் போன மனுஷன்
பணத்தை எண்ணமட்டும் படிக்கிறான் !!

கோவணம் கட்டியவன்
நிலத்து வெயிலில் தினம் காயிறான் !
கோட்டு சூட்டு போட்ட மக்கா
சேற்றில் இறங்க மறுக்குறான் !!

சோறு திண்ண வேணுமுன்னு
ஸ்டார் ஹோட்டல் பக்கம் ஒதுங்குறான்!
திருவிழா வந்தா மட்டும்
திருமதியோட காரில் வந்து ஊரை பாக்குறான்!!

அப்பன் காலில் விழுந்து ஆசி வாங்க
அருவெறுப்பா நினைக்கிறான் !
அன்பு பாசம் என்பதையே
பணத்த கொண்டு மறைக்கிறான் !!

பாசமான தாயும் தந்தையும்
பேரப

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ! 05-Jan-2015 11:33 pm
புலம்பல்கள் அப்படித்தானிருக்கும் நன்றி தோழரே ! 05-Jan-2015 11:33 pm
அய்யாவின் வருகை புது உத்வேகத்தை தரட்டும் !கருத்திற்கு மிக்க நன்றி ! 05-Jan-2015 11:32 pm
கருத்திற்கு மிக்க நன்றி ! 05-Jan-2015 11:30 pm
புதிய பாரதி - கனகரத்தினம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Jan-2015 5:17 pm

அஞ்சு மணிக்கு எழுந்திருச்சி
அரை இருட்டில் அரைகால் டவுசரை
அரையாடை இடுப்பில் மாட்டிகிட்டு
அம்மா அலறல் கேட்பதெண்ணி
அவரசமாய் பின்வாசல் பின்சென்று
அவசர கடன் சிறுநீரை கழித்துவிட்டு
அசந்து தூங்க படுக்கைக்கு போனால்
அதற்குள் படுக்கை மடித்திருக்கும்....!

திரு திருவென முழிக்காதே
சிக்கிரம் பல்துலக்கு ...அம்மாவின் குரல்
அடுத்த ஓட்டம் ஆரம்பம்...
அவரசத்தில் அடுப்படிக்கு போனால்
ஆயா கிழவி குந்திக்கொண்டு
எடுப்பட்டபயலே என்காலை மிதிக்கதேனு கூக்குரலிட
பின்வாசல் திறந்து பிடிப்போம் ஓட்டம்!

தூங்கும் மரத்தை தொந்தரவு பண்ணி
தொங்கி பிடிப்போம் ஒருகிளையை
விட்டுடு விட்டுடு கதறல் காதில் கே

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழா ! 07-Jan-2015 9:47 pm
கருத்திற்கு நன்றி தோழி ! 07-Jan-2015 9:46 pm
அருமை தோழரே 03-Jan-2015 9:41 pm
அருமை ! 03-Jan-2015 9:03 pm
கனகரத்தினம் அளித்த படைப்பை (public) கனகரத்தினம் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
02-Jan-2015 7:36 pm

செவ்வக வடிவழகி
செம்மஞ்சள் நிறத்தழகி
திறந்த புத்தகமாய்
பறந்து போனவளே...!

ஒத்த ரூபாய் தந்தா
ஊரெல்லாம் சுத்தி சுத்தி நீ வருவ
உறவுக்கும் உயிருக்கும்
உறுதுணையாக நீ இருப்ப...!

பஞ்சம் வந்தாலும்
வெயிலில் நீ வெந்தாலும்
தாங்கி வந்த தகவலை
சுரம் குறையாதுரைப்பவளே !

பரிட்சைஎழுதும் பிள்ளைகளுக்கு
பரிட்சயமானவள் நீ தானே !
உனை காண இருவிழியால்
தவம் கிடப்பார் அன்று ...!

எத்தனையோ சுவராஸ்யமும்
சோகங்களையும் சுமந்தவள் நீ தானே !
மாறி வரும் உலகத்தின்
மாற்றமானாய் நீ !

அரசாங்க முத்திரையை
தினம் தினமும் தலையில் குத்தி
தலைவலியில் சுருண்டாயோ
தலைவிதியென்று மறைந்தாயோ !

தலைமுறை

மேலும்

நன்றி தோழா ! 08-Jan-2015 2:41 am
அஞ்சல் அட்டைக்கு அலங்காரக் கவி அழகு. ஒவ்வொரு செய்திகளும் அழகு வரிகளில். நிறைவு வரிகளில் கண்ணீர். வாழ்க வளமுடன் 08-Jan-2015 1:37 am
90க்கு முன் பிறந்து அதன் நிழலில் ஒதுங்காத மனிதருண்டோ! நன்றி ! 07-Jan-2015 9:58 pm
அந்த மஞ்சள் நிற அட்டை எத்தனை பேரின் வாழ்க்கையின் திருப்பு முனையாகி இருக்கும். அந்த தலைமுறை மறக்காத அதற்கு கவிபாடி அஞ்சலி செலுத்தியதற்கு மிக நன்றி ! நானும் அதில் பங்கு கொள்கிறேன் ! அருமை ! வாழ்த்துக்கள் ! 07-Jan-2015 9:53 pm
புதிய பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2014 5:00 pm

கெட்டென தெறிந்து வெட்டென மற
சட்டென புரிந்து பட்டென படரு
கிட்டென னறிந்து ஒட்டென பழகு
சிட்டென பறந்து தொட்டென தூவு
தட்டென தறிந்து யாசி
பிட்டென திடைத்த பற்றால்
பிரம்படி பட்டோன் பாதகமலத்தே !

(குறிப்பு :பொருளரிந்தோர் விளக்கலாமே )

மேலும்

புதிய பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2014 2:00 pm

அந்தி மலரே !
ஆதவன் மறைந்ததும் மலர்கின்றாய்
உன்னருகில் காத்திருக்கும் என் மேல்
வாசனையை உமிழ்கின்றாய்
என்னவளின் கூந்தல் உன்னை கெஞ்ச
சரம் தொடுத்து சூட்டுகிறேன் நான் கொஞ்ச
என்னவளின் முகம் வெட்கத்தால் நாண
எனக்குள் மோகதீ மூச்சு முட்ட
கட்டழகி அவளை கட்டியணைத்து
கிடத்துகிறேன் கயிற்று கட்டிலிலே
செவ்விதழில் இதழ் பதித்து
முத்த மழை பொழிய ஈருடலும்
முத்து முத்தாய் வியர்வைத்துளி வழிய
ஈரிதய கமலம் மெதுவாய் விரிய
முற்றத்தில் வெண்ணிலவு வெண்சாமரம் வீச
அவள் பிஞ்சு பாதத்தில் என் நெஞ்சம் கொஞ்ச
விட்டுவிட சொல்லி சேலை கெஞ்ச
கட்டியனைக்கிறாள் இருகரமிருக
மாதுளை மொட்டுக்கள் மெல்ல விரிய

மேலும்

நன்றி ! 29-Dec-2014 5:02 pm
நன்றி ! 29-Dec-2014 5:02 pm
நன்றி ! 29-Dec-2014 5:02 pm
மிக அருமையான கனவு... பாராட்டுக்கள் 27-Dec-2014 7:01 pm
புதிய பாரதி - கேள்வி (public) கேட்டுள்ளார்
18-Sep-2014 10:33 pm

நல்லதமிழ் வளர நான் கண்ட தலமென்று நானும் இங்கு இணைந்தேன் .வாயற்ற ஊமை கண்ட காட்சிதனை செவிடரிடத்தில் விவரித்த கதை போலே நற்கவிகள் மௌனித்து பார்வையற்று தவிக்குதிங்கு அய்யகோ !இங்கும் அரசியல் காழ்புணர்ச்சி முளைத்திட கண்டு என் மனம் வெதும்புதிங்கு சிலர் கவிக்கு கருத்துமழை பலர் கவியை குருடாக்கி ...பாசமான நட்பென்றால் பெய்யும் மழை பொய்க்கும் .உய்யும் கவி யாதென்று பிரித்து பார்க்க ஆளின்றி தொய்யும் தமிழ் .மதிப்பின் அடிப்படையில் சிறந்த கவி இதுவென்று தேர்ந்தெடுப்பது முறையா ?நல்லாசான் யாருமின்றி கல்விபயில்வது சரியா ?குறை திருத்த யாரும் முன்வருவதில்லை அதைதவிர்த்து ஆஹா !ஓகோ !புகழாரம் சூட்டுகின்ற சகமனிதரே
தமிழ

மேலும்

மின்னுவதெல்லாம் பொன்னல்ல....அனைவரும் உணரும் நாள் வரும். 20-Sep-2014 1:21 am
கேள்வி போர். 19-Sep-2014 11:21 pm
ஏன் எந்த கோவம் ... காய் கணித்து வர நீண்ட நாள் ஆகாது 19-Sep-2014 12:53 pm
வணக்கம் புதிய "பாரதி" இவ்வாறு புலம்புவது தகுமா தோழமையே ? பார்வையற்று தவிக்கும் நற்க்கவிதைகள் குறித்த கருத்துகள்,பகிர்வுகள்,விமர்சனங்கள் ஆகியவற்றை நீங்களே துவங்கி வையுங்களேன்.நல்ல கவிதைகளை நீங்கள் அடையாளம் காட்டக் காட்ட..நீங்கள் காட்டும் வழியில் உங்களோடு பயணிக்க நாங்கள் தயாராக உள்ளோம். வாருங்கள் இணைந்து பயணிப்போம்.! 19-Sep-2014 12:33 pm
புதிய பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2014 1:21 am

வெட்ட வெளிக் காடு
வெறுத்தவங்க ஓடு
வெள்ளிக் கிண்ணம் பாரு
வெங்காயங் கடிச்சி உண்ணும் சோறு !

பட்டப்பகலாட்டம் மாநகரம் இரவினிலே
இருந்தும் இருட்டுக்குள்ள உண்ணுராக சோறு
வெந்ததா வேகலையா ஏதும் அறியா கூரு
வந்தவரை திண்ணு பின்
நொந்து கொள்ளும் பாரு

காலை கதிரவன் முகத்தில்
கண்விழிக்கும் மனித ஜாதி
கண்மாய் குளத்தில குதித்து குளிக்கும்
கல்லாட்டம் உடம்பை வளர்க்கும் உழவனுங்க

பத்துமணிக்கு விடியளுங்க
பத்தியமானா சாப்பாடுங்க
பார்த்து பார்த்து உண்ணுபுட்டு
சோப்பலாங்கியா மாறி மாறி
மாநகர வாழ்கையில் மாடுமாதிரி திரியுறாங்க

பணம் பெட்டி நிறையா இருந்தும்
கல்லாட்டம் மனம் மட்டும்

மேலும்

கையில் காசில்லாட்டியும் அக்கறையா வாழும் மனிதன் கரிசல் காட்டு மனிதந்தானுங்க ! உண்மை . விடியளுங்க - விடியலுங்க நன்( று)றி. தொடருங்கள் .. 19-Sep-2014 8:39 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

M.Muthulatha

M.Muthulatha

TamilNadu
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
Nishan Sundararajah

Nishan Sundararajah

கத்தார்

இவர் பின்தொடர்பவர்கள் (10)

Nishan Sundararajah

Nishan Sundararajah

கத்தார்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (10)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
user photo

svshanmu

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே