கிராம பெற்றோரின் புலம்பல்கள்

ஏர் ஓட்டப் பழக்கியவன்
கார் ஓட்டப் பழக்கல !
சோறுபோட பழகியவன்
தார் ரோட்டை பார்க்கல !!

மனுஷ மனதை படிச்ச மனிதன்
பள்ளிகூடம் பக்கம் போகல !
பள்ளி கூடம் போன மனுஷன்
பணத்தை எண்ணமட்டும் படிக்கிறான் !!

கோவணம் கட்டியவன்
நிலத்து வெயிலில் தினம் காயிறான் !
கோட்டு சூட்டு போட்ட மக்கா
சேற்றில் இறங்க மறுக்குறான் !!

சோறு திண்ண வேணுமுன்னு
ஸ்டார் ஹோட்டல் பக்கம் ஒதுங்குறான்!
திருவிழா வந்தா மட்டும்
திருமதியோட காரில் வந்து ஊரை பாக்குறான்!!

அப்பன் காலில் விழுந்து ஆசி வாங்க
அருவெறுப்பா நினைக்கிறான் !
அன்பு பாசம் என்பதையே
பணத்த கொண்டு மறைக்கிறான் !!

பாசமான தாயும் தந்தையும்
பேரபிள்ளையை கொஞ்சகூட மறுக்குறான்!
தானும் அந்த மடியில் பிறந்ததையும்
தன்னை வாழவைத்த தெய்வமென்பதை மறக்குறான்!!

ஊரு காத்து உடம்புக்கு ஒவ்வாதுன்னு
ஒரு ராத்திரிக்குள் ஊரைவிட்டு கிளம்புறான்!
வண்டி நிறைய வாட்டர் கேனை
கொண்டுவந்து மண்டி மண்டி குடிக்கிறான்!!

மறந்து போன சொந்தகளை
நினைவு படுத்த மறுக்கிறான்!
வண்டி நிறைய வயலில் வெலஞ்சதமட்டும்
கொண்டு போக விரும்புறான்!!

நொந்த மனசை தேத்த
சொந்த மனசுமில்லைங்கோ!
வந்துபோகும் சாக்கிலும்
சொத்து கணக்க பார்க்கிறான்!!

வெந்தபுண்ணில் வேலாக
சத்தம் போட்டு தொலைக்கிறான் !
மாச மாசம் அனுப்பும் பணத்திற்கு
கணக்கு மட்டும் கேக்குறான் !!

அப்பன் ஆத்தாவை பார்த்து
ஒன்னும் தெரியாது உனக்கென்கிறான்!
ஊருக்குள் யாருக்கு என்னசெய்யனும்னு
லிஸ்ட் போட்டு குடுக்கிறான் !!

ஒன்னும் தெரியா பிள்ளையாட்டம்
வாயை மூடி கிடக்குறோம் !
ஒட்டுமொத்த சுதந்திரத்தை பெத்த பிள்ளையிடம்
அடகு வைத்து நடைபிணமாக இருக்குறோம் !!

எழுதியவர் : கனகரத்தினம் (4-Jan-15, 10:59 pm)
பார்வை : 81

மேலே