புரட்சி பூ மலரட்டும்

உனக்குள்ளே ஒழிந்த கோழையை ஓட்டு
மனதுள்ளே துயிலும் உறமதை கூட்டு
நேதாஜி வழியதனை எதிரிக்கு காட்டு
சிதறியோடும் வீணர்களை சிறையிட்டு பூட்டு !

பணமென்னும் பாதாளத்தில் விழுந்து பரிதவிக்கும்
பண்பாளனை மேடைமேல் ஏற்று
அறமெனும் அறிவுதனை அகிலத்தில் மெருகூட்டு
அகிம்சையை மலையேற்றி தர்மத்தை நிலைநாட்டு !

பஞ்சமா பாதகனை பலியிட்டு
துச்சமாய் நினைத்தவனை துகிலுரித்து
அச்சமென்றால் என்னவென்று அவனுக்கு காட்டு
பஞ்ச சீல நீரினை நாடெங்கும் ஊற்று !

பஞ்சம் பசியெங்கும் தலைவிரித்தாட
நெஞ்சம் குளிருடன் இமயத்தில் போராட
குளுகுளு அறையில் கொஞ்சும் தலைவனை
தலை கொய்யாது ! தலையில் வைத்து கொண்டாட

நாடி அடங்கிடும் நடுநிசி குளிர்
நம்பிக்கையோடு போராடும் வீரன் நிலை யாது ?
நயவஞ்சக தலைவன் கண்டு
நம்பிக்கை துரோகியை வெளிர் !

எழுதியவர் : கனகரத்தினம் (24-Jan-15, 6:10 pm)
பார்வை : 61

மேலே