விடியலின் முன் இருண்டிடுமோ விடியாதிருந்திடுமோ

இருளில் பிறந்த சுதந்திரமே
விடிய லென்பது உனக்கு கிடையாதா ?
யார் போட்ட மந்திரமோ
வார்ப்பானது தந்திரமே !

ஐந்தாம் தலைமுறை வந்தாச்சு
விண்வெளி ஓடத்திலும் உன்பெயர் வச்சாச்சு
விவசாய நிலமெல்லாம் தரிசாச்சு
விஞ்ஞானம் மட்டும் வளர்த்தாச்சு !

நீ கண்ட மூத்த குடி கருகி சருகாச்சு
நீலி கண்ணீரும் வடிச்சாச்சு
நீலகடலையும் இழந்தாச்சு
நீதி கண்கள் குளமாச்சு !

வந்தவரெல்லாம் வாரி சுருட்ட
வெந்தவரையெல்லாம் ஓட விரட்ட
வெண்தரையும் சிவப்பாச்சு
விடியல் சிவப்பை காணலையே !!

குடியரசு தினமும் பிறந்தாச்சு
குடிமக்கள் வாழ்வையழிக்கும் குடி திறந்தாச்சு
குற்றமெல்லாம் நீதியாச்சு
குட்டையில் ஊறிய மட்டைகலாச்சு!!

ஒட்டிய வயிறு காத்திருக்கு உனக்காக
ஒட்டியாணம் கேட்டு நச்சரிக்குது விலைவாசி !
விடியலின் முன் இருண்டிடுமோ? பசுமை இழந்த பயிர்!
விடியா திறந்திடுமோ ஊசலாடுது உயிர்?!!

பணத்தை கொடுத்தால் எல்லாம் நடக்கும்
உயிரை கொடுத்தாலும் சுதந்திரம் வருமா ?
பெற்ற சுதந்திரமே உறக்கத்தில் கிடக்க
பெறாத பிள்ளைக்கு பெயருந் தானெதற்கு ?

எழுதியவர் : கனகரத்தினம் (26-Jan-15, 3:12 am)
பார்வை : 182

மேலே