ஒன்றும் ஒன்று மூன்று ஒற்றுமைதான் நம்ம வாழ்வு
தொடர்வண்டி ஓட்டத்திலே
தொங்கிக்கொண்டு போறேனானே
போகிற போக்கிலதான்
எட்டி எட்டி பார்க்கிறேன்...!
எத்தனை பெட்டியென்று
என்னி எண்ணி பார்க்கிறேன்!
இத்தனை பெட்டியையும்
இழுத்து செல்லும் இஞ்சின் நிலை என்னவாகும்?!!
இயந்திரம் தான் இஞ்சினென நானறிவேன்!
இருந்தாலும் எனக்குள்ளே இருதயம் துடிக்கிறதே!
நெருப்பாக இஞ்சின் தகதகிக்க பின்னாலே
ஏசியில பலர் குளுகுளுன்னு இலவசமா பயணிக்க...!
மாண்புமிகு மந்திரியும் ஓசியில குந்திக்கொண்டு
மக்கள்பணி செய்யசொல்லி இலவசமா தந்த இடத்தில்
மனையாளில்லா மகளிரோடு களப்பணியில் மூழ்கிடவே
மக்களோடு மக்களாக மானம்கெட்டு போறாரே!!
காசுகொடுத்து பயணிக்கும் உழைப்பாளிங்க
கஷ்டப்பட்டு உழைச்சிபுட்டு காத்துவாங்க இடமில்லா
கடைசி பெட்டியில முச்சுவிட வழியின்றி நெரிசலில்
தினம் தினமும் செத்து செத்து பயணிகிறாங்க...!!
கள்ளசாராயம் காச்சி பலகுடிகெடுத்தவனும்
பல உயிரை கொன்னு புதைச்சவனும்
மணல் கொள்ளையில் மாளிகை எழுப்பியவனும்
மந்திரியா மரியாதையா உலாவருவதினால் இந்தநிலை?!!
சுண்டக்கஞ்சி குடிச்சவனையும்
கஞ்சா அடிச்சவனையும்
பலர் தாலி அருத்தவனையும்
பிக்பாக்கெட் அடிப்பவனையும்
பாரமாக எண்ணியே இருப்புபாதையும் தான் சுமக்குதய்யா!
தினம் கூலி பெறுவோரும்
ஆதரவற்ற ஏழையும்
கரு சுமந்த தாயாரும்
கருணையுள்ள மனிதரும்
உள்ளுக்குள்ளே இருப்பதெண்ணி
உள்ளம் புழுக்கத்தோட தினம் ஓடுதய்யா !
வழியெல்லாம் வரண்டநிலம்
புளுதிக்காத்தில் மணல் பறக்க
அக்கினி வெயிலின் அனல்பறக்க
அசதியின்றி ஓடுதுபார் இரயிலு !
அலுத்துப்போன பாதையில
புழுத்துப்போன இதயங்களை தான் சுமந்து
ஓடுகிற ஓட்டத்தில....
தென்றலாக காற்றடிக்க
போட்டுவைத்த வைத்த குப்பை காற்றினில் கலக்க
மூக்க பொத்தி நாமுமதில் பயணிக்க...!
வண்டிக்குள்ள வாங்கி திண்ண நிறைய வரும்!
வகைவகையா தோரணமாய் அணிவகுத்து தானேவரும்!
வக்கனையா உட்காந்து வாங்கி தின்னும் பண்டாரங்களே?!!
திண்ண குப்பையை எழுந்து போட மனமின்றி
இறைத்து போவதாலே மூக்க பொத்தி போகிறோம்
நாமென்று நினைத்து பார்த்ததுண்டா ?!!
இல்லாத சட்டம் பேசி
இல்லாதவனிடம் எகிறும் மக்கா !
எல்லோர்க்கும் நலமாய் அமைய
இருக்குமிடத்தை சுத்தமாக பேணிக்காப்போம்!!
ஒன்றிலிருந்தே பிறக்கும் ஒற்றுமை
ஒவ்வொன்றாய் செயல்படுத்தி
நாட்டை நன்றாக்கி நலமுடனே வாழ்த்திடுவோம் !
பிணியை துரத்த இன்றே பணியிலிறங்கி பயன்பெறுவோம் !!