காவேரி - அன்று இன்று

அன்று..!

பட்டதெல்லாம் போதுமென்று
பாழுங்கிணறும் ஊறுமென்று
நடுயிரவினில் பறையடித்திட
நாடிவருவா ளென்காவேரி..!

வரும்போது வஞ்சிமுகத்தில்
வட்டனிலவதும் வடிவமைத்து
வெள்ளியோடை துள்ளிக்குதிக்க
வரவேற்கு மொருசிறப்பு ..!

கஞ்சிக்கென்று காத்துகிடக்கும்
காவலாளி கூட்டத்திற்கோர்
காற்றையனுப்பி தூதுசொல்ல
கெண்டைமீனின் நாடிதுடிப்பு..!

நட்டவிதையது நாட்டியமாடிட
நெற்றிசுற்றியென நாணலுமாடிட
மெத்தைவெளியினில் புல்லுயர
மேதையெனவே வோடிமகிழ்வாள்..!

பட்டிதொட்டியதில் பாதம்பதித்து
பச்சைபயிரின் தாகம்னனைத்து
பட்டினிபோரின் பாரம்தீர்த்து
பசிதீர்த்தாள் பத்தினிபெண்ணாய்..!

காண்பவரெல்லாம் கண்டுகளிக்க
கரையோரமதில் துள்ளிகுதிக்க
கலைமகளாய் முந்திவிரித்தாள்
கவலையிலா தாயொருத்தி...!



இன்று...!

கண்வைத்தா னெவனோவொரு
களவாணி பெற்றமகன்
மேனியெல்லாம் கொப்பளிக்க
மேலேயவன் கொதிப்படைந்தான்..!

கரைபுரண்ட காவேரியழகை
கரைதெரிய ஆக்கிவிட்டான்..!
கண்ணீரில் தவிக்கவிட்டு..
தண்ணீரை குறைத்துவிட்டான்...!

உழைப்பாளி கூட்டமெல்லாம்
உருக்குலைந்து போனதின்று .
விவசாயநிலமதுவும் விரிசலாகி
விலையில்லாப் போனதின்று..!

சுவரில்லாதொரு சித்திரமாய்
சுகமிழந்து போனவளோ..
கனவுலகில் காட்டாறாய்
கைகாட்டிப் போய்விட்டாள்..!

தாயிழந்த பிள்ளையெல்லாம்
தாகத்தால் அலைவதுபோல்
தாவரங்கள் தவிப்பெல்லாம்
தாயவளைத் தேடுதடி ...!

எழுகின்ற யெண்ணங்களலையாக
எனக்குள்ளே நம்பிக்கைவுருவாக
நிச்சயமாய் வறுவாளென்காவேரி
நிம்மதியாய் நாம்தேடும்நீரெடுத்து...!

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (8-Jan-15, 9:13 pm)
சேர்த்தது : ஜெபீ ஜாக்
பார்வை : 216

மேலே