தாய்மையில் இறைவனை காண்போம்

தன்னை நினைக்காமல்
என்றும் தன் குழந்தைகளை நினைக்கும்
ஓர் தூய உள்ளம் கொண்ட தெய்வம்!
தெய்வம் நம்மை ஏமாற்றலாம்!
தாய் அன்பு அன்றும் இன்றும் என்றும் மாறாதது!
தெய்வம் சோதிக்கும் போதெல்லாம்
தாய் அதை தாங்கி
தன்னை தருவாள் வேதனைகளை தாண்டி!
தன் குழந்தைகளை காக்க தன்னை தருவாள்
இறைவனை வேண்டி!
அவள் அன்பின் முன் இறைவன்
தடுமாறுவான்! பின்னர் தடம் மாறுவான்!
அன்பில் உன்னை விட யாரும் இல்லை என்றே
அருள் செய்து நகர்வான்!
அந்த அருள் தந்த இறைவனை
நாம் கண்டதில்லை
நம் தாயினை வணங்கி இறைவனை காண்போம் மனதிற்குள்.
தாயினை மனதிற்குள் வணங்கும் நம்மை நோக்கி
இறைவன் புன்னகைக்கிறான்!
இவர்கள் சோதனைக்கு அப்பாற்பட்டவர்கள் என்று
ஏன் என்றால் தாய்மையின் அன்பை பெற்றவர்கள் !
இறைவனின் அன்பை பெற்றவர்கள் !
அதனால் தான் என்னவோ சொன்னார்கள்
தாயிர் சிறந்த கோவில் இல்லை என்று.
கோவிலில் தாய்மை தனை காண்போம்
தாய்மையில் இறைவனை காண்போம் .

எழுதியவர் : sai (8-Jan-15, 7:50 pm)
சேர்த்தது : சாய்
பார்வை : 97

மேலே