இவர்களா புதுமைப்பெண்

🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

*பாரதி கண்ட*
*புதுமைப் பெண்ணா ?*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

மகாகவி பாரதியே!
நீ கண்ட கனவு பெண்
இன்று நிஜமாக இருக்கிறாள்...

ஆனால்

அவள்
நித்தம் தரும்
பிரச்சனையைத் தான்
தாங்க முடியவில்லை.....

நேர்கொண்ட பார்வை
வேண்டுமென்றாய்....
ஆம் !
அவர்கள்
நேராகத்தான் பார்க்கிறார்கள்
எதிர் வீட்டு இளைஞனை...

நிமிர்ந்த
நன்னடை வேண்டுமென்றாய்....
ஆம் ......!
நிமிர்ந்து தான் நடக்கிறார்கள்
ஆனால்
நன்னடையோடு அல்ல
லெக்கின்ஸ் உடையோடு....

நிலத்தில் யாருக்கும்
அஞ்சாத நெஞ்சம்
வேண்டும் என்றாய்....
ஆம் ....!
அஞ்சாமல் தான்
இருக்கிறார்கள்
பெற்றோர்களுக்குக் கூட.....

உன் வார்த்தையை மதித்து பெண்ணை
வெளியே விட்டவர்கள் தான் .....
இன்று
வெளியில் தலைக்காட்ட
முடியவில்லை......

ஆணுக்குப் பெண்
இழப்பில்லை என்று
நீ சொன்னாய்......
அதனால் தான்
பெண்களும் வருகிறார்கள்
டாஸ்மாக் கடைக்கு.......

வற்புறுத்தி பெண்ணை
கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தை தள்ளி
மிதிப்போம் என்றாய்.....
இன்று
சொந்த வீடு
அரசு வேலை
அப்பாஸ் முகம்
இல்லையென்றால்
எந்த ஆண்களையும்
தள்ளி விட்டு போகிறார்கள் ......

காதலன் ஒருவனை
கைபிடித்து
அவன் காரியத்திற்கு
கை கொடுக்க சொன்னாய்.....
இன்றைய பெண்களோ
காதலன் ஒருவனை
கைப்பிடிக்கிறார்கள்
அவர்கள் காரியம் முடிந்ததும் கல்யாணத்திற்கு
மற்றொருவன் கையைப்
பிடித்துக் கொள்கிறார்கள்.....

பட்டங்கள் ஆள்வதும்
சட்டங்கள் செய்வதும்
பாரினில் நடத்து வந்தோம் என்று
நீ சொன்னாய்.....
ஆனால்
இவர்களோ
செல்போன் ரீசார்ஜ்காகவும்
ஊர் சுற்றுவதற்கும்
ஒருவன் பின்னால்
ஓடிக்கொண்டு உள்ளார்கள்.....

மாதர் அறம் செய்து பழமையின் பெருமையோடு வாழ சொன்னாய்
இவர்களோ !
மாதர் சங்கம் வைத்து
பழமையை புறம் தள்ளி
சிறுமையோடு வாழ்கிறார்கஙள்...

நீயோ ....!
பெண்கள் நிமிர்வதற்காக
கும்மியடித்தாய்...
இவர்களோ !
"பொருள் புரியாமல்"
உன் பாடலை
குனிய வைத்து
கும்மியடிக்கிறார்கள்
ஆம் ....!
புதுமைப் பெண்கள் அல்லவா....?

*கவிதை ரசிகன்*

🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭😐😐

எழுதியவர் : கவிதை ரசிகன் (2-Jul-24, 8:29 pm)
பார்வை : 19

மேலே