சாய் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சாய்
இடம்:  kovai
பிறந்த தேதி :  30-Jun-1970
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Sep-2013
பார்த்தவர்கள்:  209
புள்ளி:  45

என்னைப் பற்றி...

வர்ஷா துளசி என்பது என் 5 வயது மகளின் பெயர். அவள் நர்சரி பள்ளியில் படிக்கிறாள். என் பெண்ணின் பெயரை புனை பெயராக வைத்து நான் கவிதை களை எழுதுகிறேன்! நான் பேரூர் என்ற இடத்தில "வர்ஷா துளசி ஹோம் டெக்கர்ஸ்" என்ற பெயரில் செராமிக் டைல்ஸ் ஷாப் நடத்துகிறேன். நன்றி .

என் படைப்புகள்
சாய் செய்திகள்
சாய் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2021 9:39 pm

பிறந்த பொழுது தாயின் பாசம்
நடக்கும் காலம் தந்தையின் ஊக்கம்
பள்ளியிலோ ஆசிரியரின் நேசம்
வளரும் பருவத்தில் நண்பர் களின் நட்பு
சோகத்தில் சொந்தங்களின் வார்த்தை
திருமண பந்தத்தில் மனைவியின் புரிதல்
வேலையில் முதலாளியின் கருணை
இக்கட்டான நேரத்தில் சுற்றத்தாரின் ஆதரவு
துன்பம் வரும் நேரம் பிள்ளைகளின் ஆறுதல்
இவை எல்லாம் காலத்தின் மறு உருவம்!
கவலை ஒன்றும் தேவை இல்லை
காலம் நம்மை கரை சேர்க்கும்
மரத்திற்கு மழை போல
வெயிலிற்கு நிழல் போல
பசிக்கு உணவு போல
தாகத்திற்கு நீர் போல
ஏழ்மைக்கு கோடை போல
நடையில்லா கால்களுக்கு தடி போல
காலத்தின் மறு உருவம்
நம்மையும் கரை சேர்க்கும் ஓர் நாள்

மேலும்

சாய் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2020 5:42 pm

 வேப்பிலை ஊற வைத்த நீரை பருகி நலமுடன் இருப்போம்.
 ஆறு மணி நேரத்திற்கு பின் வேப்பிலைகளை எடுத்து , வேறு தண்ணிரில் போட்டு அதனை மறுநாள் காய்ச்சி நீராடலாம்.
 இரவு உணவில் ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்க்கலாம்.
 சளி பிடிக்காமல் இருக்க ஒரு நாள் தேங்காய் எண்ணை மறுநாள் அக்மார்க் நல்லெண்ணெய் தலைக்கு தேய்த்து வரலாம்.
 சளி இருந்தால் நல்லண்ணை மட்டும் தேய்த்து வரலாம்
 மஞ்சள் தூள் , திரிபாலன சூரணம் வகைக்கு ஒரு ஸ்பூன் கலந்து வைத்துக்கொண்டு நாசி துவாரங்களின் உட்பக்கம் தடவி வர மண்டை நீர் , சளி , கபம் இறங்கிவிடும்
 கால் பாதத்தின் அடியில் அடிக்கடி சூடாக ஒத்தடம் கொடுக்கலாம்.
 இவ்வாறு கொரோனாவிற்கு வி

மேலும்

சாய் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2020 7:57 pm

ஓர் நுண்ணுயிரின் இணைப்பு இது
கண்ணுக்கு தெரியாத ஓர் உண்மை இது
உலகமே போராடுகின்றது !
நாட்டுக்கு நாடு இன்று இடைவெளி
ஊருக்கு ஊர் இன்று இடைவெளி
வீட்டுக்கு வீடு இடைவெளி
மனிதனுக்கு மனிதன் இடைவெளி
உறவுகளுக்குள் இடைவெளி
இடைவெளியே நம்மை இணைக்கும் காலம் வரும்.
துன்பங்கள் நிரந்தரம் அல்ல
நம்பிக்கை நம்மை கரை சேர்க்கும்
இன்று நமது தனிமை
நாளைய தலைமுறையின் உயிர்ப்பு!
தனிமையில் தன்னை உணர்வோம்
இதை தரணிக்கு எடுத்துரைப்போம் !
தன்னை அறியும் அறிவை அறிந்து
இதை தரணிக்கு எடுத்துரைப்போம்
உனக்கும் எனக்கும் இந்த இடைவெளி
கண்ணுக்கு தெரியாத ஓர் உண்மை !

மேலும்

சாய் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2018 5:32 pm

காவிரி தாயே
உன் பாதையிலே
உன்னை ஓடவிடாமல்
தடை வைத்து
உன் வளமான
குருதி என்னும் மணலை விற்று
உன் பிள்ளைகள் நாங்கள்
உனக்கு துரோகம் இழைத்துவிட்டோம்!
இரு பிள்ளைகள் நாங்கள்!
மூத்த பிள்ளைக்கு சுயநலம் அதிகம்!
இளைய பிள்ளைக்கோ பொறுப்பொன்றும் இல்லை!
உன் கருணை வேண்டி இன்று
கருணை மனு போடுகின்றோம்!
மூன்றாம் மனிதனிடம்
மண்டியிட்டு வாழ்கிறோம் !
மூத்த பிள்ளை தானோ உமக்கு
செல்ல பிள்ளை ?
இந்த இளைய பிள்ளை
ஏனோ எடுப்பார் கைப்பிள்ளை!
பெற்ற மனம் பித்து
பிள்ளை மனம் கல்லு என்பது
உண்மையாகி விட்ட காலம் இது!
உன் அருமை தெரியாமல்
காக்காமல் விட்டுவிட்டோம் !
உன்னையே அழித்து இன்று
செல்வத்தை த

மேலும்

உலகத்து நாடகத்தில் இனி யாவும் சிலரது இலாபத்திற்காக போராட்டமாகும் ஐயம் உள்ளது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Mar-2018 7:48 pm
சாய் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Feb-2018 3:01 pm

நிலவும் புவியும் கதிரவனும்
ஓடி ஓடி ஓய்ந்து விட்டு
சில நேரங்களில் இளைப்பாற
ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்
காலம் அது!
நிலவு சொல்கிறது
மாதம்தோறும் நான் வளர்ந்து
தேய்கிறேன்!
இரவில் ஒளிர்கிறேன்!
அழகை தருகிறேன்
ரசிப்பதற்கு!
விருந்து தருகிறேன் கண்களுக்கு!
இந்த மனித இனம் என்ன தருகிறது?
புவி சொல்கிறது
எல்லோரையும் தாங்கி
நான் பாரம் சுமக்கிறேன் !
கதிரவனை சுற்றியே
ஓடி வருகின்றேன் !
புது ஆண்டை தருகிறேன்!
என்னை நானே சுற்றி
நாளை தருகிறேன்!
கதிரவன் சொல்கிறான்
உங்கள் இருவரையும்
நான் தான் பார்த்து கொள்கிறேன் !
மழை தருகிறேன் ! ஒளி தருகிறேன் !
நாம் ஓய்வெடுத்தால் உயிர்கள் அழியும்

மேலும்

தங்கள் அனைவரின் ஊக்குவிப்பிற்கு மிக்க நன்றி. எழுத்து.காம் நம்மையெல்லாம் சந்திக்க வைக்கிறது. 02-Feb-2018 11:27 am
உள்ளங்களை திருத்திக் கொள்ளுங்கள் எண்ணங்கள் புனிதமாய் செப்பனிடப்படும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Feb-2018 12:35 am
கலக்கிட்டிங்க சாய்...... வாழ்த்துக்கள். அதிலும் "அன்று கிரஹணம்! அவன் மனம் - உடல் - ஆத்மா எல்லாம் நேர் கோட்டில்....." சிறப்பு 01-Feb-2018 6:29 pm
சாய் - சாய் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jan-2018 3:05 pm

அணுவோடு அணுவாகி பொருளானவன்
பொருளோடு பொருளான பேரறிவாளன்
துகளோடு துகளான மூலம் அவன்
தனியாக உருவாகி தான் நின்றவன் !
தொடங்கும் தொடக்கத்திற்கு முடிவானவன்
முடிந்த முடிவிற்கு தொடக்கமும் அவனே !
தத்துவத்திற்கெல்லாம் வித்தகன்!
முக்கண் முதல்வன் அவன் நெற்றிக்கண்ணன்
தர்மத்தை நிலைநாட்டும் தார்மீகன்
உள்ளத்தில் அன்பான ஆன்மீகன்!
முடிவை முடிக்கும் மூலவன் !
முன்னேற வழி நடத்தும் முதல்வனாவான் !
தாண்டவத்தில் அனைவருக்கும் பாடம் சொல்வான் !
அவன் அசைந்தால் தான் அசையும் அகிலம் எல்லாம் !
எங்கே என்பவருக்கு எங்கும் இல்லை
இங்கே என்பவருக்கு இங்கே உள்ளான்
அங்கும் இங்கும் எங்கும் உள்ளான்!
மனம் இல்லாதவர்க

மேலும்

உங்கள் கருத்துக்கு நன்றி! 01-Feb-2018 2:27 pm
ஒவ்வொரு செயல்களும் ஆராயப்பட்டு செய்யப்படுமாயின் அதற்கு காரணம் மனம் மட்டுமல்ல படைத்த இறைவனின் நம்பிக்கையும் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Jan-2018 8:44 pm
சாய் - சாய் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Sep-2017 6:24 pm

ஒளி இல்லையென்றால்
விழிகளுக்கு மதிப்பில்லை
கண்ணீர் இல்லையென்றால்
கண்களின் அழகிற்கு மதிப்பில்லை
புன்னகை இல்லையென்றல்
இதழ்களுக்கு மதிப்பில்லை
அன்பு இல்லையென்றால்
இதயத்திற்கு மதிப்பில்லை
தடைகள் இல்லையென்றால்
காதலுக்கு மதிப்பில்லை
எல்லை இருந்திருந்தால்
வனத்திற்கு மதிப்பில்லை
இரவு இல்லையென்றால்
ஓய்விற்கு மதிப்பில்லை
உழைப்பு இல்லையென்றால்
செல்வத்துக்கு மதிப்பில்லை
வழி காட்டாத மனம் இல்லையென்றால்
அனுபவத்திற்கு மதிப்பில்லை
கொடுக்க மனம் இல்லையென்றால்
தானத்திற்கு மதிப்பில்லை
பொருள் கொடுத்து பெற்ற கல்வியால்
அடுத்தவர்க்கு மதிப்பில்லை.
ஆசிரியர் இல்லாமல் பெற்ற எந்த
வித

மேலும்

சாய் - சாய் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2014 5:29 pm

காலம் என்னும் சகுனியால்
கவர்ந்திழுக்கப்பட்ட என்
புலன்கள் என்னும் பாண்டவர்கள்!
அவர்களின் எதிர் வரிசையிலே
ஓர் ஆயிரம் கௌரவர்கள் எண்ணங்களாக
கர்வம் என்னும் துரியோதனன் தலைமையில்!
அங்கே உணர்வு என்னும் பீமன்
பார்வை என்னும் விஜயன்
கேள்வி என்னும் சகாதேவன்
வார்த்தை என்னும் நகுலன்
அறிவு என்னும் தருமன்!
எண்ண கௌரவர்கள் ஆர்பரிகிரார்கள்!
சூது ஆரம்பிகிறது !
விதி என்னும் பகடை உருட்டபடுகிறது !
இழப்பதற்கு தயாராகிறான் தருமன் !
எல்லாம் இழந்த பின்
மனம் என்னும் பாஞ்சாலி இழக்க படுகிறாள்!
இழுத்து வா என்கிறான் என் கர்வம் என்னும்
துரியோதனன்!
எனக்குள்ளே உருவான அந்நியன் அவனே!
கேட்கிறாள் பாஞ்சால

மேலும்

மிக அருமை தோழமையே.... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 11-Sep-2014 11:28 pm
சாய் - சாய் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Feb-2016 5:35 pm

என் மனம் என்னும் தோட்டத்தில்
உன் நினைவுகளை விதைத்து
அன்பெனும் நீர் விட்டு
கனவு பூக்களை நான்
பூமாலை போல் தொடுத்து
உனக்கு சூட நினைக்கும் நேரம்
சூரியன் வந்ததால் கண் விழித்து
பின் அறிகிறேன் இது காலை நேரமல்லவா?
வானத்து பூக்களை ஒன்றாக சேர்த்து
உனக்கு சூட நினைக்கும் நேரம்
நிலவு வந்ததால் கண் அயர்ந்து போகிறேன்.
பின்னர் தான் அறிகிறேன் இது இரவு நேரமல்லவா?
வண்டுகள் உறங்குவதால் உனக்கு
சூட நினைத்த மலரை
காத்திருந்து பறிக்க நினைத்தேன்
பின்னர் தான் அறிகிறேன் இது மாலை நேரமல்லவா?
மலர்களே உன்னிடத்தில் வந்தால்
உன் படைப்பை நினைந்து வியக்கும்.
ஏனென்றால் நீ ஓர் பேசும் மலர்.
புன்னகைக்கும்

மேலும்

மலர்களின் மாநாடு விழியின் வழியில் மனதின் ஒளியில் கனவின் வெளியில் வானில் நிலவில் அழைப்பிதழ் அழைக்கப்பட்டு நேர்கிறது மாலை மங்கும் பொழுதில் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Feb-2016 11:02 pm
சாய் - சாய் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Aug-2017 4:04 pm

கண்ணுக்கு தெரியாத
உயிரினங்கள் ஏராளம்.
ஆனாலும் அறிவியல்
சொன்னால் நாம் ஏற்று கொள்கிறோம்!
நம் கண்களுக்கு பார்க்கும் தூரம்
மிக குறைவு!
கண்ணுக்கு எட்டாத தூரம்
அவன் உறைவிடம்.
காதுக்கு கேட்காத தூரம்
அவன் உறைவிடம்.
கண்களால் நாம் வெளியில் தேடும் அவன்
உண்மையில் வெளியில் இல்லை!
அவன் ஒவ்வொரு மனதிலும் இருக்கிறான்
ஒவ்வருக்குள்ளும் இருக்கிறான் !
தன்னை அறியாமல் வெளியில் தேடுகிறோம்!
தன்னை அறியாமல் தானே கெடுகின்றோம்!
உள்ளத்தின் உள்ளுக்குள் தேடி பாருங்கள் !
எண்ணத்தை நேராக்கி தேடி பாருங்கள்!
துன்பத்தின் கரை தாண்டி தேடி பாருங்கள் !
இன்பத்திலும் ஓர் நொடி தேடி பாருங்கள் !
அன்பை விதைத்து த

மேலும்

உண்மையைத் தேடி ஓடுகின்றோம்! உள்ளுக்குள் இருப்பதை மறந்துவிட்டோம் ! சீரிய சிந்தனை ! 24-Aug-2017 8:33 am
தேடல் சுகமே !!! அருமை ✌ 23-Aug-2017 7:44 pm
தேடல்கள் மட்டும் வாழ்க்கையானால் வாழ்நாட்கள் எல்லாம் விதியின் அரசியல் என்று தென்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Aug-2017 6:09 pm
சாய் - சாய் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2014 2:01 pm

மையினால் உலகை வென்றவன் நீ!
உன் தலைமையில் கவிதை அரசி
உலகை ஆட்சி செய்தாள்!
வறுமைக்கு உன் கவிதைகள் நம்பிக்கை தந்தன!
பெண்மைக்கு பெருமை சேர்த்தன!
புலமைக்கு நீ ஓர் வழிகாட்டி!
முதுமை தனை பார்த்திராத உன் கவிதைகள் !
எளிமையான உன் வாழ்க்கை பாதை
கடமை என்னும் போர்வாள் கொண்டு
அடிமை தனத்தை துரத்த நீ கொண்ட முயற்சி!
மேன்மையான இந்தியா தான் உன் கனவு!
இனிமையான இசையான உன் பாடல்கள்!
திறமையான இந்தியர்களுக்கு உன்
அருமையான கவிதைகளே வழிகாட்டிகள்!
மையினால் உலகை வென்றவன் நீ!
எழுதும் மையினால் புரட்சி செய்தவன் நீ!

(நினவு நாள் அஞ்சலி - பாரதிக்கு )

மேலும்

நன்றி. தங்கள் கருத்து மிகவும் ஊக்குவிக்கிறது ! 12-Sep-2014 9:06 pm
அருமை நட்பே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 11-Sep-2014 11:51 pm
சாய் - சாய் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Sep-2014 3:09 pm

தொட்டிலிலே ஆட வந்த என் குலவிளக்கே
வாழ்க்கை கடலினில் நான் என்றெடுத்த நல்முத்தே!
உன் புன்னகையில் என் சோகத்தை விரட்டுகிறாய்!
அன்னையிவள் துயர் தீர்க்க பிறந்தவனே!

ஏடெடுத்து படிக்க வந்த ஒளிவிளக்கே!
வாளெடுத்து வெல்ல வேண்டும் உலகை நீ!
இரும்பு வாளெடுத்து வெல்ல நானும் பாடவில்லை!
அறிவு வாளெடுத்து வெல்ல தான் பாடுகிறேன்!

தாலாட்டு பாடிட தான் இந்த தாய் இருக்காள்
தாளாத சோகத்தையும் தாங்கிடுவாள்
ஆளாகும் வரை உன்னை தாங்கி நிற்பாள்!
மீளாத துன்பத்தையும் துரத்திடுவாள்!

நோயான பிள்ளை கண்டு மனம் பொறுப்பதில்லை!
நோய் தீரும் வரை உறக்கமும் கொள்வதில்லை!
சீரான வழி உனக்கு காட்டிடவே
இந்த தாலாட்டில் என் மன

மேலும்

நன்றி 11-Sep-2014 1:34 pm
தாலாட்டு கவிதையையே தாலாட்டுகிறது...அருமை நட்பே...வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Sep-2014 1:14 am
ஏடெடுத்து படிக்க வந்த ஒளிவிளக்கே! வாளெடுத்து வெல்ல வேண்டும் உலகை நீ! இரும்பு வாளெடுத்து வெல்ல நானும் பாடவில்லை! அறிவு வாளெடுத்து வெல்ல தான் பாடுகிறேன்! ------------எல்லாத் தாய்மாரும் இப்படிப் பாடினால் எதிர்காலத்தில் யுத்தங்கள் தவிர்க்கப்படலாம்! மனிதநேயம் வளர்க்கப்படலாம்! 10-Sep-2014 7:14 pm
தாலாட்டுக்கு எனது பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் ! 10-Sep-2014 5:13 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (22)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (22)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
manoranjan

manoranjan

ulundurpet

இவரை பின்தொடர்பவர்கள் (22)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
user photo

svshanmu

சென்னை
மேலே