மையினால் உலகத்தை வென்றவன் பாரதி

மையினால் உலகை வென்றவன் நீ!
உன் தலைமையில் கவிதை அரசி
உலகை ஆட்சி செய்தாள்!
வறுமைக்கு உன் கவிதைகள் நம்பிக்கை தந்தன!
பெண்மைக்கு பெருமை சேர்த்தன!
புலமைக்கு நீ ஓர் வழிகாட்டி!
முதுமை தனை பார்த்திராத உன் கவிதைகள் !
எளிமையான உன் வாழ்க்கை பாதை
கடமை என்னும் போர்வாள் கொண்டு
அடிமை தனத்தை துரத்த நீ கொண்ட முயற்சி!
மேன்மையான இந்தியா தான் உன் கனவு!
இனிமையான இசையான உன் பாடல்கள்!
திறமையான இந்தியர்களுக்கு உன்
அருமையான கவிதைகளே வழிகாட்டிகள்!
மையினால் உலகை வென்றவன் நீ!
எழுதும் மையினால் புரட்சி செய்தவன் நீ!

(நினவு நாள் அஞ்சலி - பாரதிக்கு )

எழுதியவர் : sai (11-Sep-14, 2:01 pm)
பார்வை : 96

மேலே