கடனும் திடனும்

மனமும் கலங்கும் மகிழ்ச்சி மறையும்
தினமும் உருக்கும் திடத்தை- பணத்தைக்
கடனாய்ப் பெறுதல் கருதவும் வேண்டாம்
உடனே உயிரும் கெடும்.

வறுமை நிலைமை வதைக்கும் வரைக்கும்
சிறுமை மறைதல் இயலா! - பொறுமைக்
குணமும் அறிவும் கொடையும் சுருங்கும்
பணமது இல்லான் பிணம்.

எழுதியவர் : அபி மலேசியா (11-Sep-14, 8:52 am)
பார்வை : 211

மேலே