மலர்களின் மாநாடு

என் மனம் என்னும் தோட்டத்தில்
உன் நினைவுகளை விதைத்து
அன்பெனும் நீர் விட்டு
கனவு பூக்களை நான்
பூமாலை போல் தொடுத்து
உனக்கு சூட நினைக்கும் நேரம்
சூரியன் வந்ததால் கண் விழித்து
பின் அறிகிறேன் இது காலை நேரமல்லவா?
வானத்து பூக்களை ஒன்றாக சேர்த்து
உனக்கு சூட நினைக்கும் நேரம்
நிலவு வந்ததால் கண் அயர்ந்து போகிறேன்.
பின்னர் தான் அறிகிறேன் இது இரவு நேரமல்லவா?
வண்டுகள் உறங்குவதால் உனக்கு
சூட நினைத்த மலரை
காத்திருந்து பறிக்க நினைத்தேன்
பின்னர் தான் அறிகிறேன் இது மாலை நேரமல்லவா?
மலர்களே உன்னிடத்தில் வந்தால்
உன் படைப்பை நினைந்து வியக்கும்.
ஏனென்றால் நீ ஓர் பேசும் மலர்.
புன்னகைக்கும் ஓர் மலர்.
உலகில் உள்ள மலர்கள் எல்லாம்
உன்னை தங்கள் தலைவியாக
கொண்டாடும் பூக்களின் திருவிழா தான்
இன்று என் உள்ளத்தில் அரங்கேறும்
மலர்களின் மாநாடு.

எழுதியவர் : சாய் (27-Feb-16, 5:35 pm)
Tanglish : malarkalin maanaadu
பார்வை : 135

மேலே