என் சுவாச காற்றே
( என்னை காணவில்லையே நேற்றோடு பாடல் மெட்டில் எழுதப்பட்ட காதல் வரிகள் )
எனக்காக பிறந்தவள் நீதான
உன்னை காண கொண்டேனா என் கண்ணை
காதல் கண்டு கொண்டதும் உன்னாலே அன்பே....!!
நான் பகலில் தேடினேன் வெண்ணிலவை
பகலும் இருண்டதடி நீ இல்லாமல்
நான் விடியல் காணவே முடியாத அன்பே அன்பே...!!
நடமாடும் ஓவியமே நீ வா வா
வா வா என் அன்பே வா
வந்தால் வாழ்வேனே நான்....!!
ஆக்சிஜன் இல்லாத காற்றாகி போகும்
அன்பே உன் சுவாசம் தீண்டாத காற்றும்
என் கண்கள் ரெண்டும்
உறங்காது பெண்ணே
கனவாக என் கண்ணில் இருந்தால்
என் வாழ்க்கையாவும் உனக்காக வாழ்வேன்
நீ நீங்கி போனாலே அன்றே உயிர் போவேன்
கல்லறையில் கூட உன் நினைவோடு வாழ்வேன் நான்....!!
இனிப்பான நஞ்சை என் சுவைத்தாய் என் நெஞ்சே
தானாக வலியை நீயாக ஏற்றாயே
மறந்தாக வேண்டும் இல்லை மரணிக்க வேண்டும்
என் நான் செய்வேனோ
இன்பத்தை மட்டும் வாங்கிய காதல்
சர்க்கரை நோயாய் என்னை வதைப்பதேனோ
என் சுவாச காற்றே வா வா....!!
வா வா என் அன்பே வா....!!