நடிப்பாய்…

நாட்டை யாழும் மன்னனென
நடையுடை பாவனை ஒப்பனையில்,
பாட்டும் நடிப்பும் ஓங்கிடவே
பலர்முன் கூத்தில் நடிப்பவனின்
வீட்டு ஏழ்மை நிலையினையே
வெளியே காட்ட முடிவதில்லை,
நாட்டில் பலரின் கதையிதுவே
நடிப்பாய்ப் போனது வாழ்வதுவே…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Feb-16, 5:59 pm)
பார்வை : 88

மேலே