காதலின் அவஸ்தை

ஆயிரம் முற்கள் இதயத்தை கீரும்
வலிகொள்ளும் இன்பம் காதலினாலே

வாழ்க்கையில் தோல்வி வருவதுண்டு
காதலில் தோல்வி வாழ்க்கையில் தோல்வி
மரணத்தை வேண்டி
விழுகிறேன் வானில்
விழித்து நான் பார்த்தால் இதயத்தில் ஓட்டை

குண்டொன்று வெட்டித்து
என் கண்ணை துளைத்தால்
சாகுதே என் இதயம்

வானத்தில் உள்ள மேகங்கள் அனைத்தும்
பாறையாய் மாறி விழுந்தது தலையில்

கூரிய சீப்பில் சீவிய தலையை சீவுது கத்தி
ஆசையினாலே விழுந்தது புத்தி

வெள்ளை பூ உன்னை எண்ணி
வெள்ளை அணுக்களில் சீவு கசியுதடி
பாரு இரத்தத்தில் எழுதிய எழுத்துகள்
இன்று மடிந்தது தாளில்
விட்டுத்தான் கண்ணீர் வறண்டது கண்(நீ)ணீர்

நரம்புகள் வழியே பாய்ந்தது நஞ்சு
பிரிந்திடு உயிரே பிரிந்திடு உயிரே வலிகளை தாண்டி
மறந்திடு மனமே மறந்திடு பிரிவை
இறந்திடும் முன்னே உன்னை காண துடிக்குது இதயம்
கண்மூடும் முன்னே உன்னை காண தவிக்கும் கண்கள்
உதிர்ந்திடும் முன்பே உறைந்திட வேண்டும்
உன்னை கண்ட நொடிய அந்த மரணமும் வேண்டும்

(மன்னிக்கவும் இந்த படைப்பிற்கு காதல் தோல்வியில் தற்கொலை ஒரு கோழைத்தானம்
இந்த கவிதையை படைக்க காரணம் காதல் தோல்வியின் வலியை உணரவே எழுதினேன்
என்றும் காதலித்து ஏமற்றம்
சிலரின் தவறினை உணர்க .. நன்றி )

எழுதியவர் : கவி தமிழ் நிஷாந்த் (27-Feb-16, 6:01 pm)
Tanglish : kathalin avasthai
பார்வை : 750

மேலே