காத்திருப்பு
பிள்ளை என்று நடப்பானோ ?
பின்னாலேயே நடக்கின்றாள் ;
தாய் மனதின் தவிப்புகளோ ;
ஏக்கத்திலே காத்திருப்பு !
பருவமழை தொடராதோ ;
பள்ளி விடுப்பும் தொடராதோ;
காத்திருக்கும் மாணவனின் -
காத்திருப்பு எல்லாமே ;
கவலையன்றி வேறில்லை !
வயதும் கடந்து செல்கிறது ;
வாழ்க்கையும் தொடங்கவில்லை !
தினம் தினமும் காத்திருப்பு ;
திருமண நாளும் எப்போ என்று !
குட்ட குட்ட குனிகின்றேன் ;
குடும்பம் நினைத்து போகின்றன் !
சோகம் மறைத்த காத்திருப்பும் ;
சொந்தகாலில் நிற்கவேண்டி !
காலத்தின் மேல் பழிபோட்டு ;
காத்திருப்பதெல்லாமே ;
எனைப்பற்றி அறியணும் !
எல்லோரும் மனதிலும் பதியனும் !