கிரகணங்கள்

நிலவும் புவியும் கதிரவனும்
ஓடி ஓடி ஓய்ந்து விட்டு
சில நேரங்களில் இளைப்பாற
ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்
காலம் அது!
நிலவு சொல்கிறது
மாதம்தோறும் நான் வளர்ந்து
தேய்கிறேன்!
இரவில் ஒளிர்கிறேன்!
அழகை தருகிறேன்
ரசிப்பதற்கு!
விருந்து தருகிறேன் கண்களுக்கு!
இந்த மனித இனம் என்ன தருகிறது?
புவி சொல்கிறது
எல்லோரையும் தாங்கி
நான் பாரம் சுமக்கிறேன் !
கதிரவனை சுற்றியே
ஓடி வருகின்றேன் !
புது ஆண்டை தருகிறேன்!
என்னை நானே சுற்றி
நாளை தருகிறேன்!
கதிரவன் சொல்கிறான்
உங்கள் இருவரையும்
நான் தான் பார்த்து கொள்கிறேன் !
மழை தருகிறேன் ! ஒளி தருகிறேன் !
நாம் ஓய்வெடுத்தால் உயிர்கள் அழியும்!
மூன்றும் கேட்கின்றன ஓ மனிதனே
எங்களுக்கும் நீ ஊதியம் கொடு என்று
நாங்களும் போராட்டம் செய்தால் !
அதற்காகவே நாங்கள்
கிரகணத்தை அளிக்கிறோம் !
மனிதன் நினைக்கின்றான் !
இயற்கை நமக்காக வாழ்கிறது
நாமோ பணத்திற்காக வாழ்கிறோமோ என்று!
அவன் கண்களில் துளி கண்ணீர் !
ஏன் நான் சக மனிதர்களுக்காக
வாழவில்லை என்று!
அவன் எண்ணங்களிலும் அன்று
கிரஹணம்!
அவன் மனம் - உடல் - ஆத்மா
எல்லாம் நேர் கோட்டில்.....

எழுதியவர் : sai (1-Feb-18, 3:01 pm)
பார்வை : 80

மேலே