இவளெந்தன் தாரம்

கட்டியணைக்கச் சொல்லியென்னை
கட்டியணைத்தவள் நீதானே
கண்ணாமூச்சி விளையாடும்
கள்ளக்காதலியும் நீதானே
பின்னிருந்து ஏமாற்றுகிறாள்
பிள்ளை பருவக்காரி
பின்னந்தலை மார்பில்வைத்து
பிணமாக்கும் சூனியக்காரி
இறுக்கி யணைக்கும்
இறுக்கத்திலே தெரியுதடி
இவளெந்தன் தாரமென்று
இதயம்கூட ஒலிக்குதடி
உடல்சூடு தெரியாமல்
உணர்வில்லாது இருப்பேனா
உன்னையும் அறியாதிருந்தால்
உயிரோடுநான் இருந்திருப்பேனா !...