காவேரி தாய்

காவிரி தாயே
உன் பாதையிலே
உன்னை ஓடவிடாமல்
தடை வைத்து
உன் வளமான
குருதி என்னும் மணலை விற்று
உன் பிள்ளைகள் நாங்கள்
உனக்கு துரோகம் இழைத்துவிட்டோம்!
இரு பிள்ளைகள் நாங்கள்!
மூத்த பிள்ளைக்கு சுயநலம் அதிகம்!
இளைய பிள்ளைக்கோ பொறுப்பொன்றும் இல்லை!
உன் கருணை வேண்டி இன்று
கருணை மனு போடுகின்றோம்!
மூன்றாம் மனிதனிடம்
மண்டியிட்டு வாழ்கிறோம் !
மூத்த பிள்ளை தானோ உமக்கு
செல்ல பிள்ளை ?
இந்த இளைய பிள்ளை
ஏனோ எடுப்பார் கைப்பிள்ளை!
பெற்ற மனம் பித்து
பிள்ளை மனம் கல்லு என்பது
உண்மையாகி விட்ட காலம் இது!
உன் அருமை தெரியாமல்
காக்காமல் விட்டுவிட்டோம் !
உன்னையே அழித்து இன்று
செல்வத்தை தேடினோம் !
முப்போகம் விளைந்த காலம் மாறி
இன்று மீத்தேனுக்கு வழிவிட்டு
கண்ணீர் விடுகிறோம் !
ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி
உன்னை வைத்து அரசியலும் செய்கிறோம்!
தாயே கருணை தெய்வமே
வானில் இருந்து உன் கருணை
பொழிந்து மும்மாரி வந்து
எங்களை காக்கும்
அன்னையே !
மன்னிப்பை வேண்டுகிறோம் !
காவேரி தாய் நீ
எங்களை நீதான் காக்க வேண்டுகிறோம்!

எழுதியவர் : சாய் (30-Mar-18, 5:32 pm)
Tanglish : kaveri thaay
பார்வை : 200

மேலே