அன்பு

அன்பு என்ற சொல்லை அடிமையாக்கி பார்ப்போமா
அடிமையான சொல்லில் வாழ்ந்து தானே பார்ப்போமா
அன்பிற்கு நிறம் தான் கண்டோமா
வயது தான் கேட்டோமா
உருவம் தான் பார்த்தோமா
ஆனால் நாம் போட்ட வடிவங்கள்
எத்தனை ? எத்தனை ?
தாய் என்றும் தந்தை என்றும்
சொந்தம் என்றும் பந்தம் என்றும்
நட்பு என்றும் காதல் என்றும் பிரித்தோமே
அன்பே நீ உருவமில்லாமல் பிறக்கின்றாய்
முடிவில்லாமல் போகின்றாய் அனைவரின் பலமும் பலவீனமும் நீ தானே அன்பே
நீ இருந்தால் போதுமே உலகையே மாற்றிவிடுவோமே

எழுதியவர் : பிரகதி (30-Mar-18, 8:38 pm)
Tanglish : anbu
பார்வை : 1225

மேலே