காவிரியில் நம் உயிர் ஓடுகிறது

இது கவிதை அல்ல , ஒரு சிறு கட்டுரை உங்கள் உடனந்தி கவனத்திற்கு !

எட்டு கோடி பேருக்கு சோறு போடும் விவசாயிதான் நம் தமிழ்நாட்டின் மிகவும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனமோ என்று என் மனதை உறுத்துகிறது , காவிரி மேலாண்மை வாரியம் அமைய ஏற்படும் தாமதத்தை கண்டித்து நடைபெறும் போராட்டங்களை இந்த இரண்டு நாட்களாக பார்க்கும் போது. ...

ஆம் , அன்கொன்றும் இன்கொன்றுமாய், சில பச்சை துண்டு விவசாயிகள் மட்டும் களத்தில் நிற்பது .
அம்மணமாய் திரியும் ஊரில் , ஒற்றை கோவணன் வலம் வருவதுபோல் .
அடிப்படை ஆதாரமான நீருக்கும் சோறுக்கும், மிக பெரிய அச்சுறுத்தல் வரும்போது ,. எப்படி நம்மால் இவ்வளவு அசட்டையாக , ஏதும் உணராத ஜடப்பொருளாய் கடந்து போக முடிகிறதது.

நீருக்கும் சோறுக்கும் தொடர்பே இல்லாத , எந்த ஒரு மனிதனும் இதில் இருந்து ஒதுங்கிக்கொள்ளலாம். அப்படி நம்மில் யாரேனும் இருந்தால் , அது மனிதன் என்று சொல்லமுடியாது .

அப்படியென்றால் , நாம் வீதியில் இரங்கி போராட வேண்டுமா ? . வசைபாட வேண்டுமா ? வன்முறை செய்ய வேண்டுமா ?.

தேவையில்லை .

ஒரு உயிராய் உங்கள் உணர்வுகளை வெளிக்கொணருங்கள் ., உங்கள் துட்டின் ( காசு ) மூலம் உங்கள் தட்டில் வந்த உணவை ,. டிவி , போன் , அரட்டை இது ஏதும் இல்லாமல் ,. சாப்பிடும் முன் சற்று உற்று பாருங்கள் , ஒரு நிமடமாவது உற்றுப்பாருங்கள் .... எங்கிருந்து , எதிலிருந்து , எப்படி வந்தது ?
எவ்வளவு காலம் ஆனது அது வர ? எத்தனை மனிதர்கள் இதில் ஒளிந்திருப்பார்கள்.

கண்கள் கரைபுரளாவிட்டாலும் , மனம் சற்றே கணக்கும் . ஏன் என்றால் ? இந்த நீரும் சோறும் ,.. நம் உடலோடும் உயிரோடும் பின்னி பிணைந்தது .நாம் இப்போது என்னவாக இருந்தாலும் ,. நம் முன்னோர்களில் யாரோ ஒருவன் ,. உழவனாகவோ அதன் சார்ந்த ஒருவனாகவோ மட்டும் தான் இருந்திருக்க முடியும் .

இப்போதைக்கு இதுபோதும் , இந்த உணர்வும் எண்ணமும் ... நாம் எட்டுகோடி மக்களும் உழவனாக இல்லாவிட்டாலும் , உணவிற்காக உழவை பின்தொடரும் உயிர்கள் அடிப்படையில் .

இது தமிழனுக்கு மட்டும்தானா ? இல்லை . உலகின் உள்ள அத்தனை மனிதனுக்கும் பொதுவானது .
இப்போது நாம் பாதிப்பின் பாதாளத்தில் உள்ளோம் .

தமிழுக்கும் உழவுக்குமான தொடர்பு , உயிருக்கும் உடலுக்குமானது.

இது ஒரு கிராமத்து ஏழை விவாசாயின் மகனின் , இப்போதைய சென்னை சாமானியனின் எளிய வேண்டுகோள் .
கரம் குவித்து ... கண்ணீர் விடுத்து ... மனம் கனத்து....

எழுதியவர் : (30-Mar-18, 9:17 pm)
பார்வை : 89

மேலே