அனாதை

அம்மா, அப்பா இருக்கையிலே
அனாதை ஆனோம்
அண்ணன், தம்பி இருக்கையிலே
அனாதை ஆனோம்
உற்றார் உறவினர் இருக்கையிலே
அனாதை ஆனோம்
சொந்த ஊரை விட்டு
அனாதை ஆனோம்
சொந்த வீட்டை விட்டு
அனாதை ஆனோம்
சோறு போடும் பிழைப்பை நம்பி
அனாதை ஆனோம்
பக்கத்து வீட்டுக்காரர் பெயர்
தெரியாமல் தான் வாழ்கிறோம்
சிரித்தால் கூட தனிமையில் தான்
அழுதா கூட தனிமையில் தான்
திருவிழாக்கு ஊரு போக முடியல
தாத்தா பாட்டி இறுதி சடங்கிலும்
கலந்துக்க முடியல
திரும்பி பார்க்க யாருமே இல்லையே
எல்லாம் இருந்தும் எல்லாரும் இருந்தும் அனாதையா தான் வாழ்கிறோம்......

எழுதியவர் : உமா மணி படைப்பு (30-Mar-18, 11:49 pm)
Tanglish : anaadhai
பார்வை : 213

மேலே