அணுவோடு அணுவாகி

அணுவோடு அணுவாகி பொருளானவன்
பொருளோடு பொருளான பேரறிவாளன்
துகளோடு துகளான மூலம் அவன்
தனியாக உருவாகி தான் நின்றவன் !
தொடங்கும் தொடக்கத்திற்கு முடிவானவன்
முடிந்த முடிவிற்கு தொடக்கமும் அவனே !
தத்துவத்திற்கெல்லாம் வித்தகன்!
முக்கண் முதல்வன் அவன் நெற்றிக்கண்ணன்
தர்மத்தை நிலைநாட்டும் தார்மீகன்
உள்ளத்தில் அன்பான ஆன்மீகன்!
முடிவை முடிக்கும் மூலவன் !
முன்னேற வழி நடத்தும் முதல்வனாவான் !
தாண்டவத்தில் அனைவருக்கும் பாடம் சொல்வான் !
அவன் அசைந்தால் தான் அசையும் அகிலம் எல்லாம் !
எங்கே என்பவருக்கு எங்கும் இல்லை
இங்கே என்பவருக்கு இங்கே உள்ளான்
அங்கும் இங்கும் எங்கும் உள்ளான்!
மனம் இல்லாதவர்க்கு இல்லாதவன் !
மனம் இருப்பவருக்கு உள்ளே உள்ளான் !
தன்னை அறிபவர்க்கு தானிருப்பவன் !
தனக்குவமை இல்லாமல் தனித்து இருப்பவன் !
தன்னை வென்றவற்கு துணை இருப்பவன் !
எங்கும் அன்பை உருவெடுத்தவன் .....

எழுதியவர் : சாய் (31-Jan-18, 3:05 pm)
பார்வை : 218

மேலே